உஷா நந்தினி
உஷா நந்தினி | |
---|---|
பிறப்பு | உஷா பேபி 1951 கமலேஸ்வரம், திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | பி.ஏ |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1967–1980 |
பெற்றோர் | தந்தை : கே.ஜி.இராமன் பிள்ளை தாயார் : சரஸ்வதி |
வாழ்க்கைத் துணை | மாரியப்பன் |
பிள்ளைகள் | மகள்கள் பிரீத்தி, சஜினி, கீர்த்தனா |
உஷா நந்தினி (Ushanandini, மலையாளம்: ഉഷാ നന്ദിനി) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1970 களில் தென்னிந்திய திரைப்படங்களில் குறிப்பாக மலையாள படங்களில் முன்னணி முன்னணி நடிகையாக இருந்தார். [1] இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். [2]
வாழ்கை சுருக்கம்[தொகு]
உஷா நந்தினி கேரளத்தின், திருவனந்தபுரத்தில் உள்ள காலேஸ்வரத்தில் கே. ஜி. ராமன் பிள்ளை மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு மகளாக 1949 இல் உஷா தேவியாகப் பிறந்தார். இவர் கலை இளங்கலை பட்டம் பெற்றவர். 1967 ஆம் ஆண்டில் அவள் படத்தின் மூலமாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவர் தமிழில் சிவாஜி கணேசனுக்கு கதாநாயகியாக பொன்னூஞ்சல், கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை, மனிதனும் தெய்வமாகலாம், என்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகரமே நந்தி, ஒலவம் தீரவியும், ஆ சித்ரசலாபம் பரணொட்டே ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். [3]
இவர் தொழிலதிபர் டாக்டர் எஸ் மரியப்பனை மணந்தார். இவருக்கு ப்ரீத்தி, சஜ்னி மற்றும் கீர்த்தனா மரியப்பன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். மேலும் இவருக்கு தியா தனுஸ்ரீ, தாரா தேவி என்ற இரண்டு பேத்திகள் உள்ளனர்.
பகுதி திரைப்படவியல்[தொகு]
மலையாளம்[தொகு]
- யக்ஷகாணம் (1976)
- கிரிமினல்ஸ் (1975)
- சத்தியதிந்தே நிழலில் (1975)
- பட்டாபிஷேகம் (1974)
- செக் போஸ்ட் (1974)
- அஸ்வதி (1974)
- போலீஸ் அரியருத்து (1973)
- பெரியார் (1973)
- காமுகி (1971)
- மக்கானே நினக்கு வெண்டி (1971). . . . மேரி
- ஜலகண்யகா (1971)
- ஆ சித்ராசலாபம் பரனோட் (1970)
- ஒலவம் தீரவம் (1970)
- பாடுன்ன புழா (1968)
- அவள் (1967)
- நாகரமே நந்தி (1967)
தமிழ்[தொகு]
- மாலதி (1970) (சந்திரா)
- வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971) (பொன்னி)
- முகமது பின் துக்ளக் (1971)
- சக்தி லீலை (1972) (பார்வதி தேவி)
- பொன்னூஞ்சல் (1973) (வள்ளி)
- கௌரவம் (1973) (ராதா)
- ராஜபார்ட் ரங்கதுரை (1973) (அலமேல்)
- பொன்வண்டு (1973) (சத்யபாமா)
- அத்தையா மாமியா (1974) (உஷா)
- தாய் வீட்டு சீதனம் (1975)
- மனிதனும் தெய்வமாகலாம் (1975) (விஜயா)
- என்னைப்போல் ஒருவன் (1978) (உஷா)
குறிப்புகள்[தொகு]
- ↑ "Ushanandini". malayalachalachithram.com. 2014-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Actress Usha Nandini | Usha Nandini Latest News | Usha Nandini Biography | Usha Nandini Filmography | Usha Nandini Photos | Usha Nandini Videos". spicyonion.com. 2014-02-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Profile of Malayalam Actor Ushanandini". en.msidb.org. 2014-02-24 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
ஆதாரங்கள்[தொகு]
- "Ushanandini:Profile And Biography, Malayalam Movie Actress Ushanandini latest Photo Gallery | Video Gallery, Malayalam Movie Actress Ushanandini, Ushanandini Filimography ,Ushanandini Films and Cinemas , Ushanandini Awards And Nominations". metromatinee.com. 2014-02-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - "Usha Nandhini - Movies, Photos, Filmography, Biography, Wallpapers, Videos, Fan Club - entertainment.oneindia.in". entertainment.oneindia.in. 2014-02-24 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உஷா நந்தினி |