மறுபிறவி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மறுபிறவி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | எஸ். பி. இலட்சுமணன் எஸ். எஸ். பழனியப்பன் எம். என். அருணாசலம் எம். சூரியநாராயணன் |
கதை | டி. என். பாலு |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஆர். முத்துராமன் மஞ்சுளா எஸ். ஏ. அசோகன் |
ஒளிப்பதிவு | அமிர்தம் |
படத்தொகுப்பு | டி. கே. சங்கர் வி. என். இரகுபதி |
கலையகம் | விஜயா & சூரி கம்பைன்சு |
விநியோகம் | விஜயா & சூரி கம்பைன்சு |
வெளியீடு | 9 பெப்ரவரி 1973 |
ஓட்டம் | 127 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மறுபிறவி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்முத்துராமன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். 1972-ஆம் ஆண்டில் வெளிவந்த புனர்ஜென்மம் என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பே மறுபிறவி ஆகும். உளவியலாளர் ஆபிரகாம் கோவூர் உண்மையான சம்பவமொன்றை அடிப்படியாக கொண்டு எழுதிய கதையின் பின்னணியில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது;
நடிகர்கள்[தொகு]
- ஆர். முத்துராமன் (இளங்கோ)
- மஞ்சுளா (சாரதா)
- எஸ். ஏ. அசோகன்
- விஜயசிறீ
- சுகுமாரி
- நாகேஷ்
- தேங்காய் சீனிவாசன்
- எம். ஆர். ஆர். வாசு
- மனோரமா
பாடல்கள்[தொகு]
கண்ணதாசன் இயற்றிய பாடல்களுக்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார். எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி, எம். ஆர். விஜயா, சரளா, பி. எஸ். சசிரேகா ஆகியோர் பாடியிருந்தனர்.
இல. | பாடல் | பாடகர்கள் | இயற்றியவர் | நீளம் (நி:செ) |
1 | ஏடீ பூங்கொடி ஏனிந்தப் பார்வை | எம். ஆர். விஜயா | கண்ணதாசன் | 04:16 |
2 | அலைகளிலே தென்றல் வந்து | பி. சுசீலா | 03:09 | |
3 | சொந்தம் இனி உன் மடியில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 03:01 | |
4 | காவேரி மான்தோப்புக் கனியோ | சூலமங்கலம் ராஜலட்சுமி | 03:09 |