பாக்தாத் பேரழகி
பாக்தாத் பேரழகி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | கணேஷ் ராமண்ணா கணேஷ் கிரியேஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரவிசந்திரன் ஜெயலலிதா |
வெளியீடு | அக்டோபர் 25, 1973 |
நீளம் | 4717 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாக்தாத் பேரழகி 1973 ஆம் ஆண்டு டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் ரவிசந்திரனுக்கு சோடியாக ஜெயலலிதா நடித்தார். ஜெயசுதா, சாவித்திரி, சுபா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இது 25 அக்டோபர் 1973 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[3] இந்தியில் ஷேஜாதி மும்தாஜ் என்றபெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் (1977 இல்) பிறகு வெளியிடப்பட்டது.[4]
கதை
[தொகு]குவிஸ்தான் நாட்டுக்கு ந்தன அழகியான சுபைதா (சகுந்தலா) வந்து மன்னரின் மனதில் இடம்பெறுகிறாள். பின்னர் அவளும் அவளது சகோதரன் முராசும் தங்கள் கைப்பிடிக்குள் நாட்டைக் கொண்டு வருகின்றனர். பட்டத்து அரசி சிறையில் அடைக்கபடுகிறாள். இளவரசி காட்டுவாசிகளிடம் சிக்கிக் கொள்கிறாள். இளவரசன் அப்துல்லா (ரவிச்சந்திரன்) நாடற்றவனாகிறான். பாக்தாத் பேரழகி நடத்தும் போட்டியில் வெற்றிபெறும் இளவரசன் அப்துல்லா, அவளின் மனதையும் வெல்கிறான். பின்னர் அவளின் உதவியுடன் தன் நாட்டை எப்படி மீட்கிறான் என்பதே கதை.
நடிகர்கள்
[தொகு]- மும்தாஜாக ஜெயலலிதா
- இளவரசர் அப்துல்லாவாக ரவிச்சந்திரன்
- அரசி கதீஜாவாக சாவித்திரி
- சுல்தான் சையத் அலி அசனாக மேஜர் சுந்தரராஜன்
- கமராக நாகேஷ்
- அரச குரு சர்தாராக எஸ். ஏ. அசோகன்
- சுபைதாவாக அ. சகுந்தலா
- தளபதி முராசாக இரா. சு. மனோகர்
- மாமாவாக வி. கே. ராமசாமி
- குலாபியாக தேங்காய் சீனிவாசன்
- சுரையாவாக சச்சு
- இளவரசி சீனத்தாக சுபா
- சகிலாவாக ஜெயசுதா
- புஷ்பமாலா
- அரச குருவின் உதவியாளராக என்னத்த கண்ணையா
- அரச குருவின் உதவியாளராக டைப்பிஸ்ட் கோபு
- சரளா
- தளபதி சிகந்தராக சண்முகசுந்தரம்
- நடனக் கலைஞராக ஆலம்
- நடனக்கலைஞராக பூலோரடா
இசை
[தொகு]இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைக்க, பாடல்வரிகளை புலமைப்பித்தன் எழுதினார்.[5]
பாடல் | பாடகர் | நாளம் |
---|---|---|
"நடனம் 1" | இசைக்கருவி | 02:05 |
"பாடி பாடி" | எல். ஆர். ஈசுவரி, சாய்பாபா | 03:19 |
"நடனம் 2" | இசைக்கருவி | 02:43 |
"நவாப்புக்கு ஒரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லய்யா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 06:36 |
"நான் குடித்து" | எஸ். ஜானகி, எல். ஆர். ஈசுவரி | 04:36 |
"நான் வெச்ச வெச்ச குறி" | டி. எம். சௌந்தரராஜன் | 03:56 |
"வாங்க உங்கலதான் வாங்க" | எல். ஆர். ஈசுவரி | 04:04 |
"நாடு நாடு" | எஸ். ஜானகி | 04:40 |
வரவேற்பு
[தொகு]கல்கியின் காந்தன் நடிகர்களின் நடிப்பு, ரகுமானின் ஒளிப்பதிவு, ராமண்ணாவின் இயக்கம் போன்வற்றை பாராட்டினார். ஆனால் அசோகனின் நடிப்பையும், பொறுமையைச் சோதிக்கும் பல பாடல்கள் இருப்பதையும் விமர்ச்சித்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "11 Powerful Photos Of Jayalalithaa Tell You Why She Will Always Be The Silver Jubilee Star". IndiaTimes. 6 December 2016. Archived from the original on 18 November 2017. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
- ↑ Namrata Joshi (7 December 2016). "Jayalalithaa's fleeting Hindi cinema connect". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171220053846/http://www.thehindu.com/news/cities/mumbai/Jayalalithaas-fleeting-Hindi-cinema-connect/article16771594.ece1.
- ↑ "A super star in reel & real life". The Hans India. 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 11 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190411185121/https://www.thehansindia.com/posts/index/Cinema/2016-12-06/A-super-star-in-reel-real-life/267246.
- ↑ Namrata Joshi (7 December 2016). "Jayalalithaa's fleeting Hindi cinema connect". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171220053846/http://www.thehindu.com/news/cities/mumbai/Jayalalithaas-fleeting-Hindi-cinema-connect/article16771594.ece1.
- ↑ "Baagdath Perazhagi Tamil Film Ep Vinyl Record MS Viswanathan". Mossymart. Archived from the original on 16 June 2023. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
- ↑ காந்தன் (25 November 1973). "பாக்தாத் பேரழகி". Kalki. p. 28. Archived from the original on 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.