சண்முகசுந்தரம் (நடிகர்)
சண்முகசுந்தரம் | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு |
இறப்பு | சென்னை | 15 ஆகத்து 2017
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1963 - 2017 |
சண்முகசுந்தரம் (இறப்பு:15 ஆகஸ்ட் 2017) தமிழ் குணச்சித்திர நடிகராவார். நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், ம. சு. விசுவநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுக்களில் பாடகராகப் பங்களித்தார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
சண்முகசுந்தரம் சென்னையில் வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும் போது, அவரது நண்பர்களான சில நாடக நடிகர்களுடன் நாடகம் ஒன்றைப் பார்க்க சென்றிருந்தார். அந்நாடகத்தில் நடிப்பதாக இருந்த ஒருவர் அன்று வராததால், அந்த வாய்ப்பு சண்முகசுந்தரத்திற்குக் கிடைத்தது. அப்பாத்திரத்தில் திறமையாக நடித்து பாராட்டுப் பெற்றார். அதன் பின்னர் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பை அவதானித்த சிவாஜி கணேசன் இரத்தத் திலகம் (1963) திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்தார். இத்திரைப்படத்தில் இவர் சீன இராணுவத் தளபதி வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் (1964) திரைப்படத்தில் சல்லியன் வேடத்தில் நடித்தார்.[2]
1989 இல் கங்கை அமரனின் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரனில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 1990களின் இறுதியில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளிவந்த அண்ணாமலை, செல்வி அரசி ஆகிய நாடகங்களில் நடித்தார்.
நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்[தொகு]
திரைப்படங்கள்[தொகு]
- இரத்தத் திலகம் (1963)
- கர்ணன் (1964)
- வாழையடி வாழை (1972)
- இதயக்கனி
- குறத்தி மகன்
- படிக்காத பண்ணையார்
- தசாவதாரம் (1976)
- மீனாட்சி திருவிளையாடல் (1989)
- கரகாட்டக்காரன் (1989)
- மௌனம் சம்மதம் (1990)
- கிழக்கு வாசல் (1990)
- தங்கமான தங்கச்சி (1991)
- காவல் நிலையம் (1991)
- நான் போகும் பாதை (1991)
- சிங்கார வேலன் (1992)
- வில்லுப் பாட்டுக்காரன் (1992)
- பங்காளி (1992)
- கோயில் காளை (1993)
- மணிக்குயில் (1993)
- என் ராஜாங்கம் (1994)
- செவத்த பொண்ணு (1994)
- சுப்பிரமணிய சாமி (1994)
- மஞ்சுவிரட்டு (1994)
- நம்ம ஊரு ராசா (1996)
- பொங்கலோ பொங்கல் (1997)
- உன்னை தேடி (1999)
- நீ வருவாய் என (1999)
- எதிரும் புதிரும் (1999)
- சாஜகான் (2001)
- சென்னை 600028 (2007)
- சரோஜா (2008)
- கோவா (2010)
- புகைப்படம் (2010)
- தமிழ்ப்படம் (2010)
- கலகலப்பு (2012)
- நண்பன் (2012)
- ஒன்பதிலே குரு (2013)
- தாவணிக் கனவுகள்
- நானே ராஜா நானே மந்திரி
- பிரியாணி (2013)
- மாசு என்கிற மாசிலாமணி (2015)
- திரிஷா இல்லனா நயன்தாரா (2015)
- ஜாக்சன் துரை (2016)
- கடவுள் இருக்கான் குமாரு (2016)
- அச்சமின்றி (2016)
- வெருளி (2017)
- அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017)
தொலைக்காட்சி நாடகங்கள்[தொகு]
- அண்ணாமலை
- செல்வி
- அரசி
- வம்சம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்". தி இந்து (தமிழ்). 15 ஆகத்து 2017. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19496269.ece?homepage=true. பார்த்த நாள்: 15 ஆகத்து 2017.
- ↑ http://www.nettv4u.com/celebrity/tamil/supporting-actor/shanmuga-sundaram