டைப்பிஸ்ட் கோபு
கோபாலரத்னம் | |
---|---|
பிறப்பு | 1933/1934[1] |
இறப்பு | (அகவை 85)[2][3] |
செயற்பாட்டுக் காலம் | 1955–2019 |
அறியப்படுவது | திரைப்பட, நாடக நடிகர் |
கோபாலரத்னம் எனும் இயற்பெயரைக் கொண்ட டைப்பிஸ்ட் கோபு (இறப்பு: மார்ச் 6, 2019) 600 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர்.[1][4][5]
நடிப்புத் தொழில்
[தொகு]திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்னம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் சோ மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.
1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1] 1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.[6] இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.[7]
நடித்த சில திரைப்படங்கள்
[தொகு]- நாணல்
- அதே கண்கள்
- உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்
- அதிகாரி
- சுகான சுமைகள்
- ஊர் மரியாதை
- திக்கற்ற பார்வதி
- ஆலயம் (திரைப்படம்)
- உயர்ந்த மனிதன் (1968)
- திருமலை தென்குமரி (1970)
- அகத்தியர் (1972)
- காசேதான் கடவுளடா (1972)
- மேயர் மீனாட்சி (1976)
- பரிச்சைக்கு நேரமாச்சு (1982)
- மைக்கேல் மதன காமராஜன் (1989)
- பெரியார் (2007 திரைப்படம்)
தொலைக்காட்சித் தொடர்கள்
[தொகு]- வசூல் சக்கரவர்த்தி
- வீட்டுக்கு வீடு லூட்டி
- மிஸ்டர். பிரைன்
- துப்பறியும் சாம்பு[8]
இறப்பு
[தொகு]டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "வாய்ப்பும், வருமானமும் தேவை!". தினமணி. 2011-07-31. http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article633301.ece. பார்த்த நாள்: 2013-11-26.
- ↑ "பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு: நாடகத்தினர், திரையுலகினர் அஞ்சலி". காமதேனு. 6 மார்ச் 2019. Archived from the original on 6 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2019.
{{cite magazine}}
: Check date values in:|access-date=
,|date=
, and|archive-date=
(help) - ↑ https://www.indiaglitz.com/typist-gopu-died-y-gee-mahendra-drama-troupe-tamil-news-230970
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-01-07.
- ↑ "Kalaimamani awards announced". The Hindu. 2003-10-11 இம் மூலத்தில் இருந்து 2003-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031026093219/http://www.hindu.com/2003/10/11/stories/2003101106480400.htm. பார்த்த நாள்: 2013-11-26.
- ↑ Malathi Rangarajan (2004-04-30). "The `Typist' is a contented man" இம் மூலத்தில் இருந்து 2004-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041112120552/http://www.hindu.com/fr/2004/04/30/stories/2004043001720500.htm. பார்த்த நாள்: 2013-11-26.
- ↑ https://www.youtube.com/watch?v=6R6wQe_GcOc
- ↑ பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு
வெளியிணைப்புகள்
[தொகு]- Life Time Achievement Award, The Hindu, ஏப்ரல் 13, 2017
- டைப்பிஸ்ட் கோபுவின் நேர்முகப் பேட்டி ஆனந்த விகடன், ஜூலை 25, 2018