திக்கற்ற பார்வதி
Jump to navigation
Jump to search
திக்கற்ற பார்வதி | |
---|---|
இயக்கம் | சிங்கீதம் சீனிவாசராவ் |
தயாரிப்பு | என். லக்ஸ்மிகாந்தா ரெட்டி நவதராங் எச். வி. சஞ்சீவ ரெட்டி |
கதை | ராஜாஜி |
இசை | சிட்டி பாபு |
நடிப்பு | ஸ்ரீகாந்த் லட்சுமி |
ஒளிப்பதிவு | மங்கடா இரவி வர்மா |
வெளியீடு | சூன் 14, 1974 |
நீளம் | 3048 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திக்கற்ற பார்வதி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் சிங்கீதம் சீனிவாசராவ் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியின் "திக்கற்ற பார்வதி" என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு காரைக்குடி நாராயணன் திரைக்கதை, வசனம் எழுதினார். இப்படத்தின் வெளிப்புறப் படபிப்பிடிப்பு முழுவதும் இராஜாஜியின் சொந்த ஊரான இப்போதைய கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி மற்றும் ஒசூரைச் சுற்றியுள்ள இடங்களிலுமே நடந்தது. துணை நடிகர்களாக ஒசூரில் உள்ளவர்களே நடித்தனர்.
இசை அமைப்பாளர்: பிரபல வீணைவித்துவான் சிட்டிப்பாபு