உள்ளடக்கத்துக்குச் செல்

முள்ளும் மலரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்ளும் மலரும்
இயக்கம்மகேந்திரன்
கதைஉமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் என்ற புத்தகத்தின் அடிப்படை
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு
வெளியீடு1978
நீளம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முள்ளும் மலரும் (Mullum Malarum) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் [1][2][3] கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா ஆகியோர் நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

தமிழ் பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "செந்தாழம் பூவில் வந்தாடும்"  கண்ணதாசன்கே. ஜே. யேசுதாஸ் 4:35
2. "அடி பெண்ணே பொன்னூஞ்சல்"  பஞ்சு அருணாசலம்ஜென்சி அந்தோனி 4:30
3. "இராமன் ஆண்டாலும்"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். அஞ்சலி குழுவினர் 5:44
4. "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு"  வாலிவாணி ஜெயராம் 2:54

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  2. மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
  3. மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளும்_மலரும்&oldid=3712432" இலிருந்து மீள்விக்கப்பட்டது