உமாசந்திரன்
Appearance
உமாசந்திரன் | |
---|---|
பிறப்பு | பூர்ணம் ராமச்சந்திரன் ஆகத்து 14, 1914 முன்னீர்பள்ளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | ஏப்ரல் 11, 1994 | (அகவை 79)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | முள்ளும் மலரும் (புதினம்) |
பெற்றோர் | பூர்ணம் கிருபேசுவர ஐயர், உமாபார்வதி |
உமாசந்திரன் (14 ஆகத்து 1914 – 11 ஏப்ரல் 1994)[1]) தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர். முள்ளும் மலரும் எனற இவரது புதினம் 1978ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. இவரது இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன்.
பிறப்பு
[தொகு]உமாசந்திரன் சொந்தவூர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் ஆகும். அவ்வூரிலுள்ள சிவன் கோவிலுள்ள பூர்ணகிருபேசுவரைப் போற்றி இவர் குடுபத்து ஆண்கள் பெயருக்கு முன்னால் பூர்ணம் என்னும் அடைமொழியை இணைப்பது வழக்கம். இவர் தந்தை பூர்ணம் கிருபேசுவர ஐயர் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பணியாற்றியபொழுது, அங்கு 1914 ஆகத்து மாதம் 14ஆம் நாள் இவர் பிறந்தார். இவர் தாயின் பெயர் உமாபார்வதி; இவர் தம்பியர் பெயர் பூர்ணம் விசுவநாதன், பூர்ணம் சோமசுந்தரம், பூர்ணம் பாலகிருட்டிணன் இவர் தம்பியர்.
படைப்புகள்
[தொகு]- அன்புச்சுழல்
- அன்புள்ள அஜிதா
- ஆகாயம் பூமி
- ஒன்றிய உள்ளங்கள்
- காயகல்பம்; 1998; இதயம் பேசுகிறது இதழில் வெளிவந்த தொடர்
- முள்ளும் மலரும்[2], கல்கி நடத்திய வெள்ளிவிழா நாவல் போட்டியில் முதற்பரிசு பெற்றது தமிழ் இலக்கிய வரலாறு - சி. பாலசுப்பிரமணியன்; 27ஆம் பதிப்பு 1998; மணமலர் பதிப்பகம், சென்னை; பக். 356
- பாசவியூகம்
- புகையும் பொறியும்
- பொழுது புலர்ந்தது
- வாழ்வுக்கு ஒரு தாரகை[3]
- வானொலியில் சங்கமித்த இதயங்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- பன்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர் எழுதிய மராத்தியப் புதியனம்; நேசனல் புக் டிரஸ்ட் [4]
சான்றடைவு
[தொகு]- ↑ தென்றல்
- ↑ இந்து தமிழ்திசை; 2019 ஏப்ரல் 2
- ↑ "உமாசந்திரன்". நூல் உலகம். https://www.noolulagam.com/s/?stext=%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&si=0. பார்த்த நாள்: 26 December 2022.
- ↑ [1]