முன்னீர்பள்ளம்
முன்னீர்பள்ளம் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 627356 |
முன்னீர்பள்ளம் (Munnirpallam) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருநெல்வேலியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், பாளையங்கோட்டையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 655 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
மக்கள் வகைபாடு
[தொகு]இந்த கிராமத்தில் 1,928 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7,183 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,616 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3567 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 72.03% ஆகும். இதில் ஆண்களில் எழுத்தறிவு விகிதம் 77.26% என்றும், பெண்களிட் எழுத்தறிவு விகிதம் 66.87% ஆகும்.[2] இந்த ஊரின் எழுத்தறிவு விகிதமானது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]இந்த ஊரில் பரிபூரண கிருபேசுவரர் என்ற சிவன் கோயில் உள்ளது. இந்த ஊரில் பிறக்கும் ஆண் பிள்ளைகளுக்கு இந்த சிவனின் பெயரை வைப்பது வழக்கமாக உள்ளது.[3]
ஊரைச் சேர்ந்த பிரபலங்கள்
[தொகு]- மு. சி. பூரணலிங்கம் பிள்ளை[3][4]
- பூர்ணம் இராமச்சந்திரன் (எழுத்தாளர் உமாசந்திரன்) [3]
- பூர்ணம் விஸ்வநாதன்[3]
மேற்கோள்
[தொகு]- ↑ "Munnerpallam Village". www.onefivenine.com. Retrieved 2023-02-05.
- ↑ "Munnirpallam Village in Palayamkottai (Tirunelveli) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2023-02-05.
{{cite web}}: Text "villageinfo.in" ignored (help) - ↑ 3.0 3.1 3.2 3.3 "பூர்ணம் விஸ்வநாதன் 100: குறையொன்றுமில்லை!". Hindu Tamil Thisai. Retrieved 2023-02-05.
- ↑ "மு.சி.பூர்ணலிங்கம் 10". Hindu Tamil Thisai. Retrieved 2021-05-25.