நண்டு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நண்டு
இயக்கம்மகேந்திரன்
தயாரிப்புஎஸ். தக்சிணாமூர்த்தி
ரங்கராஜ் கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுரேஷ்
அஸ்வினி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
வெளியீடுஏப்ரல் 17, 1981
நீளம்3559 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நண்டு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் [1][2][3] வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், அஸ்வினி (நடிகை) மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதை[தொகு]

லக்னோவில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவரன ராம் குமார் சர்மா. இவர் சிறுவயதில் இருந்து ஆஸ்துமாவால் அவதிப்பட்டுவந்தவர். எதோச்சதிகாரியான தனது தந்தையின் நடத்தை பிடிக்காதவர், என்றாலும் தனது அன்பான அம்மாவின் பாசத்துக்கு கட்டுப்பட்டு குடும்பத்தில் இணைந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறும் ராம்குமார் சென்னைக்கு வந்து சேர்கிறார். சென்னையில் ஒரு வேலையைத் தேடிக்கொள்கிறார். அங்கே உடன் வேலைப் பார்க்கும் சீதாவைச் சந்திக்கிறார். தரகரின் (குமாரி முத்து) உதவியுடன் ஒரு வீட்டை வாடகைக்குத் தேடி, ஒரு வீட்டுக்கு வருகிறார். அங்கே அவர் அதே வீட்டில் கீழ் பகுதியில் உடன் வேலைசெய்யும் சீதாவும் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இதைப் பார்த்து இந்த வீட்டிலேயே வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார்.

தந்தையை இழந்து தாய், அக்கவாவுடன் வாழ்பவர் சீதா. அக்காளின் கணவர் ஒரு கொடுமைக்காரர். ராம்குமார் சர்மாவும் சீதைவும் பழகுவதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் தவறாக பேசுகின்றனர. இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். இதற்கு முதலில் சீதாவின் அக்காள் கணவர் முட்டுக்கட்டைப் போடுகிறார். அமைதியின் உருவமாக அதுவரை இருந்த சீதா இது எங்கல்யாணம். எல்லாமே என் இஷ்டம். முடிவெடுக்க வேண்டியது நான்தான், நீங்க இல்ல என வெடிக்கிறாள். இதேபோல திருமணத்துக்கு ஒப்புதல் வாங்க லக்னோ செல்லும் ராம் குமார் சர்மாவை, பணத் திமிர் பிடித்த அவரது தந்தை அவமானப்படுத்தி அனுப்புகிறார். ராமுடைய அம்மா, கணவனை எதிர்த்து வாயைத் திறக்காமல் இருக்கிறார்.

ஒருவழியாக எல்லாத் தடைகளையும் சமாளித்து சீதா ராமைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு மகனையும் பெற்றெடுக்கிறாள். அதன் பின்னர் அவளது வாழ்வின் பிரதான துயரத்தை எதிர்கொள்கிறாள். அந்தத் துயரத்தின் பின்னணியாகவே படத்தின் பெயரான நண்டு என்ற தலைப்பிடப்பட்டிருக்கிறது. சீதாவின் துயரம் ராம்குமாரின் புற்றுநோய் வடிவில் வந்திருக்கிறது. எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் ராம் குமார் புற்று நோயால் இறக்கிறார். சீதாவுக்கு இப்போது ஒரே ஆறுதல் அவளுடைய ஒரே மகன்தான். அவனை ஆளாக்க வேண்டிய பெரிய பொறுப்பு அவளது கைகளில் வந்து சேர்கிறது.

நடிகர்கள்[தொகு]

  • சுரேஷ் ராம்குமார் சர்மாவாக
  • அஸ்வினி- சீதா
  • வெண்ணிற ஆடை மூர்த்தி - சிங்கமுத்து
  • வனிதா கிருஷ்ணச்சந்திரன் - உமா
  • குட்டி பத்மினி- லட்சுமியாக
  • செந்தாமரை
  • சாமிக்கண்ணு- அருணாச்சலமாக
  • எஸ்.என். பார்வதி- உமாவின் தாயாக
  • குமரிமுத்து- வீட்டு தரகராக

ஆதாரங்கள்[தொகு]

  1. "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  2. மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
  3. மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்டு_(திரைப்படம்)&oldid=3559957" இலிருந்து மீள்விக்கப்பட்டது