ரோஜா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோஜா
இயக்குனர் மணி ரத்னம்
தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர்
புஷ்பா கந்தசாமி
கதை மணி ரத்னம்
சுஜாதா
இசையமைப்பு ஏ. ஆர். ரகுமான்
நடிப்பு அரவிந்த் சாமி
மதுபாலா
பங்கஜ் கபூர்
நாசர்
ஜனகராஜ்
ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்
விநியோகம் கவிதாலயா
பிரமிட் சாய்மிரா
வெளியீடு 15 ஆகஸ்ட் 1992
கால நீளம் 137 நிமிடம்
மொழி தமிழ்
மொத்த வருவாய் $4 மில்லியன்

ரோஜா திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா மற்றும் ஜனகராஜ் நடித்துள்ளனர். மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம், டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

காதல்படம் / நாடகப்படம்

கதைச்சுருக்கம்[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்தில் வாழும் ரோஜாவின் (மதுபாலா) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி (அரவிந்த் சாமி ).ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே, ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.

புதுவரவு[தொகு]

ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பாடல்கள்[தொகு]

ரோஜா
soundtrack :ஏ. ஆர். ரகுமான்
வெளியீடு 1992
ஒலிப்பதிவு Panchathan Record Inn
நீளம் 25:33
இசைத்தட்டு நிறுவனம் Lahari
இசைத் தயாரிப்பாளர் கவிதாலயா
ஏ. ஆர். ரகுமான் காலக்கோடு

ரோஜா
(1992)
Yodha
(1992)

ரோஜா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஆறு பாடல்கள் கொண்டுள்ளது.

பாடல் பாடகர்கள்
ருக்குமணி எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
சின்ன சின்ன ஆசை மின்மினி, ஏ. ஆர். ரகுமான்
காதல் ரோஜாவே எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா
புது வெள்ளை மழை உன்னி மேனன், சுஜாதா
தமிழா தமிழா ஹரிஹரன், கோருஸ்
சின்ன சின்ன ஆசை மின்மினி

அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் வைரமுத்து

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_(திரைப்படம்)&oldid=2170236" இருந்து மீள்விக்கப்பட்டது