சுஜாதா மோகன்
Appearance
சுஜாதா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுஜாதா மோகன் സുജാത മോഹന് |
பிற பெயர்கள் | இசைக்குயில் , இசை தேவதை |
பிறப்பு | மார்ச்சு 31, 1964[1][2] திருவனந்தபுரம், இந்தியா |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகி |
இசைத்துறையில் | 1974–இன்று வரை |
சுஜாதா மோகன் (Sujatha Mohan) (பிறப்பு: மார்ச்சு 31, 1964) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் ஏறத்தாழ 20000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.
இளமைக் காலம்
[தொகு]சுஜாதா மோகன் மார்ச்சு 31, 1963 ஆம் ஆண்டு, இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் லட்சுமி என்பவருக்கு, மகளாகப் பிறந்தார். இவருடைய தாத்தா டி. கே. நாராயண பிள்ளை ஆவார். இவர் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, முந்தைய திருவாங்கூர் – கொச்சி மாநில முதல் தலைமை அமைச்சராக இருந்தார்.
திருமண வாழ்க்கை
[தொகு]1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சுவேதா மோகன் என ஒரு மகள் உள்ளார். இவரும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார்.
பெற்ற விருதுகள்
[தொகு]- 2001-ல் ‘தில்’ திரைப்படத்தில் இருந்து ‘உன் சமையலறையில்’ பாடலுக்கும், 1996-ல் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இருந்து ‘பூ பூக்கும் ஓசை’ பாடலுக்கும், 1993-ல் ‘புதிய முகம்’ திரைப்படத்தில் இருந்து ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ மற்றும் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இருந்து ‘என் வீட்டு தோட்டத்தில்’ போன்ற பாடலுக்காக, சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழ் அரசு மாநில விருது வழங்கப்பட்டது.
- பதினொரு முறை பிலிம் கிரிட்டிக்ஸ் விருது.
- சினிமா எக்ஸ்பிரஸ் விருது.
- தினகரன் விருது.
- 1996, 1999 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கேரளா மாநில திரைப்பட விருது.
- 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான ஏசியாநெட் திரைப்பட விருது.
- 2008 – ஜி.எம்.எம்.ஏ மூலம் சிறந்த பெண் பாடகர் விருது.
- 2009 – ஸ்வராலையா யேசுதாஸ் விருது.