உள்ளடக்கத்துக்குச் செல்

தாஜ்மகால் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாஜ்மகால்
சுவரிதழ்
இயக்கம்பாரதிராஜா
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபாரதிராஜா
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புமனோஜ்
ரியா சென்
மணிவண்ணன்
வெளியீடு1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாஜ்மகால் (Taj Mahal) 1999 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] தனது மகனான மனோஜ் கதாநாயகனாகவும், ரியா சென் கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். பாரதிராஜா தனது மகன் மனோஜை இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார்.[2]

திரைக்கதை

[தொகு]

தனக்குள்ளே உட்பகையையும், பழிவாங்கலையும் கொண்டு விளங்கும் இரு கிராமங்களிடையே, திரைக்கதை நடக்கிறது. இத்தகைய கிராமம் ஒன்றில் கதாநாயகனும், கதாநாயகி மற்றொரு கிராமத்திலும் வாழ்கின்றனர். 'கண்டதும் காதல்' என்ற அடிப்படையில் இவர்களிடையே காதல் மலர்கிறது. இக்காதலை, அவர்களின் பெற்றோர் கடுமையாக எதிர்கின்றனர். இச்சூழலில் கதாநாயகியின் அண்ணன், பார்த்த வேறொரு மாப்பிள்ளையை கதாநாயகி மணக்கிறாரா? என்பதே கதை. வியப்புடனான முடிவுடன் கதை முடிகிறது.

திரைப்பாத்திரங்கள்

[தொகு]

கதாநாயகனான மனோஜின், அப்பாவாக மணிவண்ணன் நடிக்கிறார். அம்மாவாக ரேவதி நடிக்கிறார். ரஞ்சிதா அண்ணியாகவும், ராதிகா மணிவண்ணின் உடன்பிறந்தவளாகவும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஜ்மகால்_(திரைப்படம்)&oldid=4098594" இலிருந்து மீள்விக்கப்பட்டது