புதிய வார்ப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய வார்ப்புகள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புமனோஜ் கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புபாக்யராஜ்
ரதி
வெளியீடுஏப்ரல் 14, 1979
நீளம்3936 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய வார்ப்புகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

தாயமங்கலம் என்னும் கிராமத்துக்கு ஆசிரியர் பணிக்கு சண்முகமணி (பாக்கியராஜ்) வருகிறார். அந்த ஊர் கோயிலில் நாதசுரம் வாசிப்பவரின் மகளான ஜோதியும் சண்முகமணியும் காதலிக்கின்றனர். பெண் மோகியான ஊர் நாட்டாமை ஜோதியை அடைய விரும்புகிறார். அதற்கு சண்முகமணி இடஞ்சலாக இருப்பதையும் உணருகிறார். ஊருக்கு புதியதாக குடும்பநல சேவகியைக் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லும் நாட்டாமை, அந்தப் பழியை சண்முகமணிமீது சுமத்தி ஊரைவிட்டு அனுப்புகிறார். ஊரைவிட்டுச் செல்லும் சண்முகணி ஜோதியை திரும்பவர்ந்து திருமணம் வமுடித்து அழைத்துச் செல்வதாக உறுதியளித்து செல்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள்". http://www.lakshmansruthi.com/cineprofiles/barathiraja-filmlist.asp. பார்த்த நாள்: செப்டம்பர் 4, 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வார்ப்புகள்&oldid=3668425" இருந்து மீள்விக்கப்பட்டது