உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் மரியாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் மரியாதை
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புபாரதிராஜா
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
ராதா
சத்யராஜ்
வடிவுக்கரசி
தீபன்
இரஞ்சனி
ஜனகராஜ்
ஏ.கே.வீராச்சாமி
ஒளிப்பதிவுகண்ணன்
படத்தொகுப்புராஜகோபால், மோகன் ராஜ்
வெளியீடு1985
ஓட்டம்160 நிமிடங்கள்
மொழிதமிழ்

முதல் மரியாதை (1985) ஆம் ஆண்டு[1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, இரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வகை

[தொகு]

கிராமப்படம் / கலைப்படம் வண்ணப்படம்

கதை

[தொகு]

அறம் பிழன்ற பெண்ணைத் தன் உறவினரின் மானம் காக்க மணம் புரிந்துகொண்டாலும், தன் மனைவியால் எப்போதும் நிந்திக்கப்பட்டு வரும் மனிதர். ஊருக்குப் புதிதாக வரும் தன் மகளின் வயதுடைய பெண்மேல் காதல் கொள்கின்றார். அவர்மேல் காதல் கொள்ளும் அறிவார்ந்த அப்பெண்ணும் ஊராரின் வசவுகளை ஏற்று அவருடைய குடும்ப மானம் காக்கக் கொலை செய்து சிறை செல்கின்றாள். அவளுக்கு இழுக்கு வராவண்ணம் அப்பெண்ணின் வீட்டிலேயே வாழ்ந்து தன் இறுதிக்காலத்தில் அவளை மீண்டும் கண்டபின் உயிர் துறக்கின்றார். அன்றில் பறவையைப் போல் அப்பெண்ணும் உயிர் துறக்கின்றார்.

பாத்திரங்கள்

[தொகு]

ஒலிப்பதிவு

[தொகு]

இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை இளையராஜா செய்திருந்தார். அனைத்துப் பாடல் வரிகளையும் வைரமுத்து இயற்றியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே புகழ்பெற்று படத்தின் வெற்றிக்குத் துணைபுரிந்தன.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நேரம்
1 "அந்த நிலாவத்தான்" இளையராஜா, சித்ரா வைரமுத்து 4:31
2 "பூங்காற்று திரும்புமா" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 4:52
3 "வெட்டிவேரு வாசம்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 4:28
4 "ஏ குருவி" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 1:16
5 "ராசாவே உன்ன நம்பி" எஸ். ஜானகி வைரமுத்து 4:32
6 "ஏ கிளியிருக்கு" இளையராஜா வைரமுத்து 1:08
7 "ஏறாத மலை மேல" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 2:08
8 "நான் தானே அந்தக்குயில்" எஸ். ஜானகி வைரமுத்து 0:28

விருதுகள்

[தொகு]

1986 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து
  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த வட்டாரத் திரைப்படம் - முதல் மரியாதை - பாரதிராஜா

மேற்கோள்கள்

[தொகு]
  1. RS, Anand Kumar (2020-08-15). "35 years of 'Muthal Mariyathai': Why this Sivaji film by Bharathiraja is a classic". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
  2. 2.0 2.1 2.2 Rajadhyaksha & Willemen 1998, ப. 472.
  3. 3.0 3.1 Sundaram, Nandhu (26 February 2021). "Why 1985 Sivaji-Radha film 'Muthal Mariyathai' remains an enduring romance". The News Minute. Archived from the original on 15 March 2021. பார்க்கப்பட்ட நாள் 15 March 2021.
  4. ""வெட்டிவேரு வாசம்.. வெடலப்புள்ள நேசம்" முதல் மரியாதைக்கு 35 ஆண்டுகள்!!" ["The fragrance of grassroots.. love of a young woman" Muthal Mariyathai turns 35!]. Puthiya Thalaimurai. 15 August 2020. Archived from the original on 16 August 2020. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  5. Sreenivasa Raghavan, T. S. (9 January 2012). "Will she? Won't she?". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 10 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120110015644/http://www.deccanchronicle.com/tabloid/glam-sham/will-she-won%E2%80%99t-she-287. 
  6. Dhananjayan 2014, ப. 284.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_மரியாதை&oldid=4045742" இலிருந்து மீள்விக்கப்பட்டது