உள்ளடக்கத்துக்குச் செல்

அந்த நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்த நாள்
இயக்கம்சுந்தரம் பாலச்சந்தர்
தயாரிப்புஏவிஎம்
கதைஜாவர் சீதாராமன்
இசைஏ வி எம் இசைக்குழு
நடிப்புசிவாஜி கணேசன்
பண்டரிபாய்
ஒளிப்பதிவுமாருதி ராவ்
படத்தொகுப்புஎஸ். சூரியா
வெளியீடு1954
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.[1] இத்திரைப்படம் அகிர குரோசவாவின் "ரசோமன்" என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதை

[தொகு]

இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.[1]

தயாரிப்பு

[தொகு]

முதலில் இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் என். விஸ்வநாதன் என்னும் மேடை நடிகர். சில நாள் படிப்பிடப்பிற்கு பிறகு காட்சிகளைப் பார்த்த ஏவிஎம் அவர்கள், படத்தில் தான் எதிர்ப்பார்த்த விறுவிறுப்பு இல்லை என்று தெரிவித்து, படத்தின் கதாநாயகனாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றுக் கூறி மீண்டும் அனைத்து காட்சிகளையும் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து படமாக்கப்பட்டது.[2] இத்திரைப்படத்திற்கு முதலில் ஒரு நாள் என்று தலைப்பு இருந்தது. ஏவிஎம் அவர்களுக்கு அத்தலைப்பு பிடிக்காததால் பின்னர் அந்த நாள் என்று படத் தலைப்பு மாற்றப்பட்டது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Andha Naal 1954 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை
  2. 2.0 2.1 Galatta Tamil கலாட்டா தமிழ் (2024-06-07). "திமிரா பேசி FLOP ஆன HERO கடைசியில நடந்த TWIST AVM Kumaran Breaks Secret". பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_நாள்&oldid=3998740" இலிருந்து மீள்விக்கப்பட்டது