கற்பகம் (திரைப்படம்)
கற்பகம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். சபரிநாத் அமர் ஜோதி மூவீஸ் |
இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா சாவித்திரி முத்துராமன் எம். ஆர். ராதா எஸ். வி. ரங்கராவ் |
வெளியீடு | நவம்பர் 15, 1963 |
நீளம் | 4567 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கற்பகம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது[1].
- இத்திரைப்படத்தின் மூலம் கே. ஆர். விஜயா தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆவார்கள். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார். ஒலிப்பதிவில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் ஒரே பின்னணி பாடகி பி. சுசீலா பாடினார். "அத்தை மடி மெத்தையடி" மற்றும் "மன்னவனே அழலாமா கண்ணீரை" பாடல்கள் புகழ் பெற்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "11th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. மே 2, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 13, 2011 அன்று பார்க்கப்பட்டது.