ஒரு இந்திய கனவு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு இந்திய கனவு
இயக்கம்கோமல் சுவாமிநாதன்
தயாரிப்புஸ்ரீ முத்தியாலம்மன் கிரியேஷன்ஸ்
டி. பி. வரதராஜன்,
விஜயலட்சுமி தேசிகன்
கதைகோமல் சுவாமிநாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசுஹாசினி,
ராஜீவ்,
பூர்ணம் விஸ்வநாதன்,
டி. எம். சாமிக்கண்ணு,
வாத்தியார் ராமன்
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புசி. ஆர். சண்முகம்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு இந்திய கனவு, 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கோமல் சுவாமிநாதன் இயக்கத்தில் சுஹாசினி, ராஜீவ் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. சுஹாசினி மற்றும் ராஜீவ் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பூர்ணம் விஸ்வநாதன், வாத்தியார் ராமன், சாமிக்கண்ணு இன்னும் பல குணசித்திர நடிகர்கள் நடித்தனர்.

கல்லூரியிருந்து கல்விச் சுற்றுப்பயணமாக ஆதிவாசிகள் வாழும் இடத்துக்கு (ஜவந்தி மலை) செல்லும் அனாமிகா (சுஹாசனி), அங்கு வாழும் ஆதிவாசிகளின் மோசமான வாழ்நிலையைக் கண்டு வேதனைப்பட்டு அவர்களின் நலனுக்காகப் போராடுவதுதான் இத்திரைப்படத்தின் கதை. அப்போராட்டத்தில் அவள் சந்திக்கும் இடையூறுகளும், அவளது மனிதாபிமானமும் தைரியமும், அவளுக்கு எதிராகவும் துணையாகவும் நிற்கும் காதாபாத்திரங்களின் செயல்களும் கதையை வளர்த்துச் செல்கின்றன.