உள்ளடக்கத்துக்குச் செல்

விசாரணை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாரணை
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்புவெற்றிமாறன்
தனுஷ்
கதைவெற்றிமாறன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
ஆனந்தி
சமுத்திரக்கனி
ஆடுகளம் முருகதாஸ்
ஒளிப்பதிவுராமலிங்கம்
படத்தொகுப்புகிஷோர் தே.
கலையகம்வொன்டர்பார் பிலிம்ஸ்
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி
வெளியீடு2015 (2015)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

விசாரணை 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் திகில் திரைப்படமாகும். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] 63 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[2] சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரானது ‘விசாரணை’ திரைப்படம். சந்திரகுமாரின் உண்மையான அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டது ’லாக்கப்’ நாவல். அதேபோல, இந்தப் படத்தில் வரும் சம்பவங்களில் பெரும்பான்மையானவை நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டவை. ‘விசாரணை’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.[3] இந்தப் படத்தை விகடன் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாகத் தேர்வு செய்தது.[4]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாரணை_(திரைப்படம்)&oldid=4064029" இலிருந்து மீள்விக்கப்பட்டது