உள்ளடக்கத்துக்குச் செல்

காக்கும் கரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்கும் கரங்கள்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎம். முருகன்
ஏ.வி.எம்.
குமரன்
எம். சரவணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
சிவகுமார்
வெளியீடுசூன் 19, 1965
நீளம்4920 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காக்கும் கரங்கள் (Kaakum Karangal) என்பது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கினார். பிரித்தானிய எழுத்தாளர் டபிள்யூ. சோமர்செட் மாம் 1925 ஆம் ஆண்டு எழுதி வெளியான தி பெயிண்டட் வெயில் புதினத்தைத் தழுவி இதன் கதை உருவாக்கபட்டது. இதை ஏ.வி.எம். புரொடக்சன்சின் துணை நிறுவனமான முருகன் பிரதர்ஸ் தயாரித்தது. இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். அவர்களுடன் நாகேஷ், எல். விஜயலட்சுமி, எஸ். வி. சுப்பையா, சிவகுமார் (அவர் இப்படத்தில் நடிகராக அறிமுகமானார்), ரேவதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படம் 1965 சூன் 19 அன்று வெளியானது. வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

கதைக்களம்

[தொகு]

மருத்துவ உதவி இல்லாததால் சங்கரின் தந்தை இறந்துவிடுகிறார். அதன்பிறகு அவரது தாயார் மிகவும் சிரமப்பட்டு படிக்கவைத்து, அவரை ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகப் படிக்க வைக்கிறார். மருத்துவரான பிறகு அவரிடம் சிகிச்சைபெற வரும் மகாலட்சுமியுடன் நட்பு உருவாகிறது. பின்னர் இருவரும் காதலிக்கின்றனர். மகாலட்சுமியின் தந்தை சுப்பையா ஒரு பணக்காரர். அவர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தங்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை என்றால் வீட்டைவிட்டு வெளியேறுவேன் என்று மகாலட்சுமி உறுதியாக கூறுவதால், இறுதியில் இருவரின் திருமணத்திற்கு சுப்பையா ஒப்புக்கொள்கிறார். இருவருக்கும் திருமணம் முடிகிறது. சிறிது காலம் கழித்து, மகாலட்சுமி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆனால் குழந்தை தீ விபத்தில் இறந்துவிடுகிறது. இது சங்கருக்கும் மகாலட்சுமிக்கும் இடையே ஒரு தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. அந்த தீவிபத்தில் காயமடைந்த சங்கர் தனது கைகளால் இனி அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று உணர்கிறார். பிறகு செஞ்சிபுரம் மலைகிராம பழங்குடியினருக்கு சேவை செய்துவருகிறார். அங்கு, அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார். அதிலிருந்து எப்படி மீண்டார், மகாலட்சுமியுடன் மீண்டும் சேர்ந்தாரா என்பதே எஞ்சிய கதையாகும்.

நடிப்பு

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இந்தப் படம், பழனிசாமி என்ற இயற்பெயரால் அறியப்பட்ட சிவகுமார் நடிகராக அறிமுகமான படமாகும். அவர் ஏற்கனவே சித்ரபௌர்ணமி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், ஆனால் அப்படம் கைவிடப்பட்டது. அதன் இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு அவரை ஏவிஎம் புரொடக்‌சன்சுக்கு காக்கும் கரங்கள் படத்தில் நடிக்க பரிந்துரைத்தனர்.[1] விஜயகுமாரியுடன் சேர்ந்து நடிக்க இரண்டாவது நாயகனுக்கு ஒரு நடிகரைத் தேடிய திருலோகச்சந்தர், பழனிசாமியைத் தேர்ந்தெடுத்தார். ஏ.வி.எம். நிறுவனர் ஏ. வி. மெய்யப்பன் பழனிச்சாமிக்கு சிவகுமார் என்ற திரைப்பெயரைச் சூட்டினார்.[2][3] இந்தப் படத்தை ஏ.வி.எம்.மின் துணை நிறுவனமான முருகன் பிரதர்ஸ் தயாரித்தது. தனது காதலியாக நடித்த நடிகையின் நடிப்புக்கு ஏற்றதாக இல்லாததால், சிவகுமாரின் பகுதிகளைக் குறைக்க வேண்டியிருந்தது என்பதை சரவணன் கூறினார். [4]

நானும் ஒரு பெண் (1963) படத்தின் வெற்றியின் காரணமாக, மெய்யப்பன் அதில் முன்னணி வேடத்தில் நடித்த எஸ். எஸ். ராஜேந்திரன், சி. ஆர். விஜயகுமாரி ஆகியோரை இப்படத்தில் நடிக்க வைக்க விரும்பினார். ராஜேந்திரன் நுட்பமான ஒரு கதாபாத்திரத்திற்கு பொருத்தமற்றவர் என்று சரவணன் எண்ணினார், ஆனால் மெய்யப்பன் அவரையே அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்வதில் பிடிவாதமாக இருந்தார். [5] படத்தில் உதவி இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றிய எஸ். பி. முத்துராமன், படத்தில் ஒரு சிறிய குழந்தையை நடக்க வைக்க குழுவினர் மிகவும் சிரம்ப்பட்டதாக கூறினார்.[6] படத்திற்கான ஒளிப்பதிவை டி. முத்துசாமி மேற்கொண்டார், படத்தொகுப்பை ஆர். ஜி. கோப் செய்தார்.[7] ராண்டார் கையின் கூற்றுப்படி, படத்தின் கதை பிரித்தானிய எழுத்தாளர் டபிள்யூ. சோமர்செட் மாம் எழுதிய தி பெயிண்டட் வெயில் புதினத்தின் தாக்கத்தால் உருவானது.[8]

இசை

[தொகு]

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[7][9] இது ஏ.வி.எம். உடன் இணைந்து முதன்முதலில் பணியாற்றிய படமாகும்.[10]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "திருநாள் வந்தது"  பி. சுசீலா 4:01
2. "அக்கா அக்கா ஆசை"  பி. சுசீலா 4:40
3. "அழகிய ரதியே"  ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈசுவரி 5:48
4. "ஞாயிறு என்பது பெண்ணாக"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:57
5. "அள்ளி தந்து"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 4:10
மொத்த நீளம்:
22:36

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

காக்கும் கரங்கள் 1965 சூன் 19 அன்று வெளியானது.[11][12] ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைமின் டி. எம். ராமச்சந்திரன் எழுதுகையில், "மையக் கருப்பொருள் ஓரளவுக்கு பரிச்சயமானதாக உள்ளது. சில காட்சிகள் பழைதாக உள்ளன. இருப்பினும், முழு கதையும் திரையில் சொல்லப்பட்டிருக்கும் கூர்மையான தன்மை மற்றும் கண்ணியத்தின் காரணமாக, படம் பார்வையாளர்களின் அனுதாபத்தையும் பாராட்டையும் பெறுகிறது".[13] முதல் பாதியில் ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பை கல்கி பாராட்டியது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் கதை சறுக்கியது என்று கூறினார்.[14] சரவணனின் கூற்றுப்படி, தவறான நடிகர் தேர்வு காரணமாக படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mohan Raman (25 October 2016). "Art of the matter". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200810132052/https://www.thehindu.com/society/history-and-culture/Art-of-the-matter/article15747777.ece. 
  2. Saravanan 2013, ப. 154.
  3. "சிவகுமாரின் முதல் படம் காக்கும் கரங்கள்" (in Tamil). மாலை மலர். 7 March 2014 இம் மூலத்தில் இருந்து 5 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151005200416/http://cinema.maalaimalar.com/2014/03/07222204/Cinema-history-Sivakumar-first.html. 
  4. சரவணன், ஏவி.எம். (6 March 2005). "அழாதீங்க தம்பி!" [Don't cry, younger brother!] (PDF). Kalki. pp. 52–55. Retrieved 12 July 2024 – via இணைய ஆவணகம்.
  5. 5.0 5.1 Saravanan 2013, ப. 155–156.
  6. S. P. Muthuraman (29 July 2015). "சினிமா எடுத்துப் பார் 19- சிவகுமாரின் மேன்மை!" (in Tamil). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 10 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200810131937/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/51755-19.html. 
  7. 7.0 7.1 காக்கும் கரங்கள் (PDF) (song book). AVM Productions. 1965. Retrieved 28 June 2022 – via Internet Archive.
  8. Randor Guy (6-12 August 2011). "Tamil cinema 75 – A Look Back | The AVM story – 75". Mambalam Times இம் மூலத்தில் இருந்து 17 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190117174155/http://mambalamtimes.in/admin/pdf/1312550277.06.08.2011.pdf. 
  9. "Kaakkum Karangal". Gaana. Archived from the original on 29 March 2014. Retrieved 7 September 2015.
  10. Saravanan 2013, ப. 155.
  11. "1965 – காக்கும் கரங்கள் – ஏ.வி.எம்" [1965 – Kaakum Karangal – A.V.M.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 5 March 2019. Retrieved 5 March 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. Saravanan 2013, ப. 152.
  13. Ramachandran, T. M. (17 July 1965). "Murugan Brothers' Latest". Sport and Pastime. Vol. 19. p. 51. Archived from the original on 1 March 2023. Retrieved 1 March 2023 – via Internet Archive.
  14. "காக்கும் கரங்கள்". Kalki. 4 July 1965. p. 29. Archived from the original on 24 July 2022. Retrieved 4 January 2022.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கும்_கரங்கள்&oldid=4359122" இலிருந்து மீள்விக்கப்பட்டது