பெண் (திரைப்படம்)
பெண் தமிழில் 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நகைச்சுவை, காதல் திரைப்படம். இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ரா.வெங்கடாசலம் மற்றும் இயக்கியவர் எம்.வி.இராமன். இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் வைஜெயந்திமாலா, ஜெமினி கணேசன்,அஞ்சலிதேவி, சுந்தரம் பாலச்சந்தர் ஆகியோராவர். இவர்களுடன் இணைந்து நடித்த நடிகர்கள் பின்வருமாறு சித்தூர் வி நாகையா , வி .கே. ராமசாமி, கே .என் .கமலம், கே.ஆர் .செல்லம் மற்றும் கே. சங்கரபாணி. இப்படத்தை தயாரித்தவர் ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தின் ஏ .வி.செட்டியார். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம், பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கு.சா. கிருஷ்ணமூர்த்தி, கே. பி. காமாட்சி மற்றும் வி.சீதாராமன். இத்திரைப்படத்தின் தொகுப்பாளர்கள் கே.சங்கர் மற்றும் எம்.வி.ராமன், ஒளிப்பதிவாளர் டி.முத்துசாமி.
இத்திரைப்படத்தின் கதை வைஜெயந்தி மாலாவும், அஞ்சலி தேவியும் நடித்த கதாபாத்திரங்களான இரண்டு நண்பர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஆகும்.
தயாரிப்பு
[தொகு]பெண் திரைப்படத்தை தயாரித்தவர் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான திரு ஏவி மெய்யப்ப செட்டியார் ஆவார்.[1] இத்திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி மொழியில் லட்கி எனவும் தெலுங்கு மொழியில் சங்கம் எனவும் தயாரிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலுமே வைஜெயந்திமாலா முன்னணி வேடத்தில் நடித்தார்.[2]
இசை
[தொகு]பெண் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம், பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கு.சா. கிருஷ்ணமூர்த்தி, கே. பி. காமாட்சி மற்றும் வி.சீதாராமன். இத்திரைப்படத்தின் தொகுப்பாளர்கள் கே.சங்கர் மற்றும் எம்.வி.ராமன், ஒளிப்பதிவாளர் டி.முத்துசாமி. பாடகர்கள் சித்தூர் வி.நாகையா மற்றும் கே.சக்கரபாணி பின்னணி பாடகர்கள் சி.எஸ்.ஜெயராமன், டி.ஏ. மோத்தி, ஜே.பி.சந்திரபாபு, டி.எஸ்.பகவதி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஏ.பி.கோமளா மற்றும் பி.சுசிலா.
இத்திரைப்படத்தில் வரும் பாடலான கல்யாணம் கல்யாணம், உல்லாசமாகவே உலகத்தில் வாழவே பாடல்களை ஜே.பி.சந்திரபாபு, எஸ்.பாலச்சந்தருக்காக பாடினார். இப்பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SANGHAM (1954)" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sangham-1954/article5643652.ece.
- ↑ Guy, Randor (2016). Memories of Madras: Its Movies, Musicians & Men of Letters. Creative Workshop. pp. 334–335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-928961-7-5.