உள்ளடக்கத்துக்குச் செல்

அக்ரகாரத்தில் கழுதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரகாத்தில் கழுதை
இயக்கம்ஜோன் ஆப்ரஹாம்
தயாரிப்புஜோன் ஆப்ரஹாம்
நிமிதி பிலிம்ஸ்
கதைவெங்கட் சாமிநாதன்
இசைஎம். பி. ஸ்ரீனிவாசன்[1]
நடிப்புஎம். பி. ஸ்ரீனிவாசன்
சுவாதி
வெளியீடு1977
நீளம்2761 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அக்ரகாரத்தில் கழுதை (Agraharathil Kazhutai) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோன் ஆப்ரஹாம் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். பி. ஸ்ரீனிவாசன்,[3] சுவாதி [3]மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அக்ரஹாரத்தில் கழுதை 1977-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். தமிழ் சினிமாவின் முன்னோடியான நியோ ரியலிச திரைப்படங்களின் வரிசையில் அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு இடமுண்டு. மலையாள சிறுகதையாசிரியரும் பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற திரைக்கதை எழுத்தாளருமான ஜான் ஆபிரஹாம் இயக்கிய ஒரே தமிழ்த் திரைப்படம் இது. தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத் தக்க கலை விமர்சகரான வெங்கட் சாமிநாதன் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதினார்.

சிறந்த படத்துக்கான தேசிய விருதுபெற்றது இப்படம். 70களின் தமிழ் கிராமம் ஒன்றில் கதை நிகழ்கிறது. சென்னை மாநகரில் கல்லூரிப்பேராசியராக பணியாற்றும் கதையின் நாயகன், தாயை இழந்து நிராதரவாக விடப்படும் கழுத்தைக் குட்டி ஒன்றை தனது செல்ல விலங்காக வளர்க்கத் தொடங்குகிறார். ஆனால் மாநகரில் தொடர்ந்து கழுதையை வளர்க்கமுடியாதபடி அவரை நெருக்கடிகள் அழுத்துகின்றன. எனவே கிராமத்திலிருக்கும் தனது அக்ரஹாரதுக்கு (பிராமணர் வாழும் தெரு) கழுத்தை அழைத்து வருகிறார். அங்கே வசித்துவரும் தன் பெற்றோரின் கண்காணிப்பில் கழுதையைக் பராமரிக்கும் பொறுப்பை ஒரு வாய்பேசவியலாத பெண்ணிடம் ஒப்படைத்து திரும்புகிறார். ஆச்சார அனுஷ்டானங்களும் பழமைவாதமும் மிக்க அந்த அக்ரஹாரம் கழுதையின் வரவை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் திரைக்கதை.

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரகாரத்தில்_கழுதை&oldid=4041571" இலிருந்து மீள்விக்கப்பட்டது