உள்ளடக்கத்துக்குச் செல்

பாதை தெரியுது பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதை தெரியுது பார்
பாதை தெரியுது பார் திரைப்பட விளம்பரம்
இயக்கம்நிமாய் கோஷ்
தயாரிப்புகுமரி பிலிம்ஸ்
கதைகதை ஆர். கே. கண்ணன்
இசைஎம். பி. சீனிவாசன்
நடிப்புகே. விஜயன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
எஸ். வி. சுப்பைய்யா
டி. கே. பாலச்சந்திரன்
முத்துராமன்
எல். விஜயலட்சுமி
சாந்தினி
சுந்தரிபாய்
எஸ். ஆர். ஜானகி
ஒளிப்பதிவுநிமாய் கோஷ்
வெளியீடுநவம்பர் 18, 1960
நீளம்15128 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாதை தெரியுது பார் (Paadhai Theriyudhu Paar) என்பது 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ். வி. சகஸ்ரநாமம், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது களத்தூர் கண்ணம்மாவுடன் இணைந்து தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[1] கோயம்புத்தூரில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டையும், தொழிலாளர்களுக்கு இழைக்கபடும் அநீதியையும் அடைப்படையாக கொண்டதாக இப்படம் இருந்தது.

நடிகர்கள்

[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்
அறிமுகங்கள்

தயாரிப்பு

[தொகு]

திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய கே. விஜயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். திரைக்கதையை மார்க்சியவாதியான ஆர். கே. கண்ணன் எழுத, பாடல்களை கே. சி. எஸ். அருணாசலம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதினார்கள். எம். பி. சீனிவாசன் பாடல்களுக்கு இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் இத்திரைப்படப் பாடல்கள் பெரு வெற்றியை அடைந்தன. படம் தோல்வியடைந்தாலும் தமிழில் வந்த சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றது.

பாடல்கள்

[தொகு]
எண். பாடல் பாடகர் வரிகள் நீளம்
1 "அழுத கண்ணீரும் பாலாகுமா" பி. சுசீலா ஜெயகாந்தன்
2 "சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்" டி. எம். சௌந்தரராஜன் கே. சி. எஸ். அருணாசலம் 06:11
3 "மாசில் வீணையும்" எஸ். ஜானகி, ஏ. எஸ். மகாதேவன் அப்பர் தேவாரம் 03:35
4 "ராசா மக போலிருந்தே" ஏ. எல். ராகவன் கே. சி. எஸ். அருணாசலம் 03:24
5 "தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே" பி. பி. சிறிநிவாஸ், எஸ். ஜானகி ஜெயகாந்தன் 04:14
6 "உண்மை ஒரு நாள் வெளியாகும்" திருச்சி லோகநாதன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Awards for Films". இந்திய சர்வதேச திரைப்பட விழா. 31 March 1961. Archived from the original on 12 October 2013. பார்க்கப்பட்ட நாள் 7 September 2011.
  2. Rajadhyaksha & Willemen 1998, ப. 365.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதை_தெரியுது_பார்&oldid=3830862" இலிருந்து மீள்விக்கப்பட்டது