கே. சி. எஸ். அருணாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. சி. எஸ். அருணாசலம், ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் திரைப்பாடலாசிரியர். பல துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் கவிதைக்கு முக்கியத்துவம் அளித்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு பூர்வீக வாள். இவரது கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை, கவிதை என் வாள், பாட்டு வராத குயில் ஆகும். இவர் ஒரு மரபுக் கவிஞர். இவர் புதுக் கவிதைக்கு எதிரானவர் என்றாலும் புதுக்கவிதை படைப்பவர்களோடு நட்புடன் பழகியவர் . பாதை தெரியுது பார் திரைப்படத்திற்காக இவர் எழுதிய சின்னச் சின்ன மூக்குத்தியாம் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 20 ஆண்டுகள் தாமரை இதழில் பணியாற்றினார். தனது இறுதி நாட்களில் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் தந்தை, நாச்சிமுத்துக் கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். ஆனால் தொடங்கிய பணியை முடிக்கும் முன் காலமானார்.

சான்றுகள்[தொகு]

பாடிப் பறந்த குயில், தினமணி, அக்டோபர் 28, 2012


ஒரு கவிஞர் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._எஸ்._அருணாசலம்&oldid=2715071" இருந்து மீள்விக்கப்பட்டது