உள்ளடக்கத்துக்குச் செல்

வாகை சூட வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாகை சூட வா
வாகை சூட வா
இயக்கம்சற்குணம்
தயாரிப்புஎஸ். முருகானந்தம்
கதைசற்குணம்
இசைஎம். ஜிப்ரான்
நடிப்புவிமல்
இனியா
தஷ்வந்த்
கே. பாக்யராஜ்
பொன்வண்ணன்
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்வில்லேஜ் தியேட்டர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 30, 2011 (2011-09-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாகை சூட வா, 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான இதனை இயக்கியவர் ஏ. சற்குணம்.[1] இந்த இயக்குனருக்கு இது இரண்டாவது திரைப்படம். அவரது முதல் படமான களவாணி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.[2] இத்திரைப்படத்தில் விமல், இனியா, முக்கிய கதாபாத்திரங்களிலும் கே. பாக்கியராஜ், பொன்வண்ணன், தஷ்வந்த், தம்பி ராமய்யா ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.[3] இத்திரைப்படத்தின் கதை, தமிழ்நாட்டில் 1960 இல் தமிழ்நாட்டின் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் நடப்பதுபோல காட்டப்பட்டுள்ளது.[4][5][6] சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளது இத்திரைப்படம்[7]

கதைச் சுருக்கம்

[தொகு]

வேலுத்தம்பி (விமல்) ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலைக்குக் காத்திருக்கும் இளைஞன். அவனை எப்பாடுபட்டாவது அரசாங்க வேலையில் சேர்ப்பதற்கு முயலும் தந்தையாக பாக்கியராஜ் நடித்துள்ளார். கிராம சேவா என்ற சமூக நல அமைப்பு 6 மாத காலம் கிராமத்திலுள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரும் இளைஞர்களுக்கு சம்பளமும் முடிவில் ஒரு சான்றிதழும் வழங்க முன்வருகிறது. அந்தச் சான்றிதழ் அரசு வேலைக்கு உதவும் என்பதால் தன் தந்தையின் கட்டாயத்தின் பேரில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்கு பாடம் சொல்லித்தர வேலுத்தம்பி செல்கிறான். அவ்வூரில் குழந்தைகள் செங்கல் சூளையில் வேலை செய்யும் அவல நிலையும் சரியான கூலி கூடத் தராமல் அங்குள்ள மக்களைக் கொத்தடிமைகளாக மாற்றி வைத்திருக்கும் செங்கல் சூளை முதலாளியின் (பொன்வண்ணன்) அக்கிரமும் சேர்ந்து அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது. ஒரு கட்டத்தில் அரசு வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு அந்தக் குழந்தைகளுக்காக அந்த ஊரிலேயே தங்க முடிவு செய்கிறான். வாத்தியாரின் அப்பாவித்தனமும் குழந்தைகளின் துடுக்குத்தனமும் திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளாக காட்டப்பட்டுள்ளன.

நடிகர்கள்

[தொகு]
 • விமல் வேலுத்தம்பியாக
 • இனியா மதியாக
 • தஷ்வந்த்
 • கே. பாக்யராஜ் அண்ணாமலையாக
 • பொன்வண்ணன் ஜேபியாக
 • தம்பி ராமையா
 • இளங்கோ குமாரவேல்
 • தென்னவன்
 • பூவிதா சிவகாமியாக
 • சூரி

இசை

[தொகு]

இப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் இசையமைப்பாளர் எம். ஜிப்ரான். இவர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள முதல் திரைப்படம் இது.[1] இப்படத்தின் இசைத்தட்டு 6 பாடல்களுடன் ஜூலை 1, 2011 இல் வெளியிடப்பட்டது.

பாடல்கள்

[தொகு]
பாடல் பாடலாசிரியர் பாடியவர் கால அளவு (நிமிடம்)
செங்க சூளக் காரா வைரமுத்து அனிதா 3:38
சர சர சாரக் காத்து கார்த்திக் நேதா சின்மயி 4:58
தஞ்சாவூரு மாடத்தி வே. ராமசாமி ஜெயமூர்த்தி 1:21
போறானே போறானே கார்த்திக் நேதா ரஞ்சித், நேஹா 5:14
தைல தைல வே. ராமசாமி ரீடா 1:03
ஆனா ஆவன்னா வைரமுத்து லிஸ்பன் இண்டர்நேஷனல் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா, குழந்தைகள் குழு 3:40
சர சர சார காத்து கரோக்கி Sing Along Version 4:58
Instrumental [சர சர சார காத்து, போறானே போறானே] 5:14

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "In quest of victory! – Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 8 May 2011 இம் மூலத்தில் இருந்து 15 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120915014601/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-08/news-interviews/29520383_1_first-film-sarkunam-vimal. பார்த்த நாள்: 10 November 2011. 
 2. "Sargunam's 'Vaagai Sooda Vaa' – Tamil Movie News". IndiaGlitz. Archived from the original on 19 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 November 2011.
 3. "In quest of victory! – Times Of India". The Times of India. 8 May 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/In-quest-of-victory/articleshow/8188464.cms. பார்த்த நாள்: 10 November 2011. 
 4. "Sargunam-vimal's Vagai Choodava Is About… – Vimal – Sargunam – - Tamil Movie News". Behindwoods.com. 19 May 2011. பார்க்கப்பட்ட நாள் 10 November 2011.
 5. "Sargunam Talks About Vaagai Sooda Vaa – Sargunam – Vimal – - Vaagai Sooda Vaa – Tamil Movie News". Behindwoods.com. 20 May 2011. பார்க்கப்பட்ட நாள் 10 November 2011.
 6. "Vimal is Veluthambi - Tamil Movie News". IndiaGlitz. 2011-06-09. Archived from the original on 2011-06-13. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
 7. Srinivasan, Meera (7 March 2012). "National award caps debutant director's success". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/arts/cinema/article2970640.ece. 
 8. "59th National Film Awards for the Year 2011 Announced". Press Information Bureau (PIB), India. பார்க்கப்பட்ட நாள் March 7, 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகை_சூட_வா&oldid=3715752" இலிருந்து மீள்விக்கப்பட்டது