தில் சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தில் சே
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
ராம் கோபால் வர்மா
சேகர் கபூர்
கதைமணிரத்னம் (கதை)
மணிரத்னம் (திரைக்கதை)
இசைஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புஷா ருக் கான்
மனிஷா கொய்ராலா
பிரீத்தி சிந்தா
ரகிவீர் ஜாதவ்
சபயசச்சி சக்கரவர்த்தி
பியுஸ் மிஷ்ரா
கிருஷ்ணகாந்த்
ஆதித்ய சிறீவஸ்தாவா
கென் பிலிப்
சஞ்சேய் மிஷ்ரா
மிட்டா வஷிஸ்த்
அருந்ததி ரௌவோ
மலைக்க அரோரா
கௌதம் போரா
மஞ்சித் பவா
ஷஅட் அலி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்மெற்றாஸ் டாக்கீஸ்
வெளியீடுஆகஸ்டு 21, 1998
ஓட்டம்163 நிமிடங்கள்
மொழிஹிந்தி

தில் சே (உயிரே) திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும்.மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.

வகை[தொகு]

காதல்படம் / நாடகப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அமர்காந்த் வர்மா (ஷா ருக் கான்) பத்திகையாளராவார்.அனைத்திந்திய வானொலியில் பணிபுரியும் இவர் மேக்னாவை (மனீசா கொய்ராலா) ஒரு புகையிரத சாலையில் சந்திக்கின்றார்.அவரிடம் காதல் வசப்படும் வர்மா பின் தொடர்ந்து சென்று காதலிப்பதையும் கூறுகின்றார்.இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் மேக்னா தனக்கு மணம் ஆகிவிட்டதென பொய் கூறுகின்றார்.ஒரு தீவிரவாதப் பெண்ணாகவும் காஷ்மீர் பகுதியிலிருந்து இந்தியப் படைகளினால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் அவல நிலைகளினால் தீவிரவாதியாக மாற்றப் படுகிறாள் எனவும் தெரிந்து கொள்ளும் வர்மா அவளிடம் நோக்கிச் செல்கின்றார்.இறுதியில் அவரைப் பார்க்கும் வர்மா அவள் தற்கொலைதாரியாக உடலில் வெடி மருந்துகளைச் சுமந்து செல்வதை உணராமல் அவள் அருகில் செல்கின்றார்.எதிர்பாராத விதமாக வெடித்த அவள் உடலில் சுமந்து சென்ற வெடிப்பொருளினால் இருவரும் இறக்கின்றனர்.

விருதுகள்[தொகு]

1999 பெர்லின் உலகத்திரைப்பட விழா (ஜேர்மன்)

  • வென்ற விருது-நெட்பாக் விருது-மணிரத்னம்

1999 தேசியத் திரைப்பட விருது (இந்தியா)

1999 பில்ம்பேர் விருதுகள் (இந்தியா)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்_சே&oldid=3156872" இருந்து மீள்விக்கப்பட்டது