ஜி. சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. சீனிவாசன்
தேசியம்இந்தியர்
பணிநடிகர், எழுத்தாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1975–2011
குறிப்பிடத்தக்க படைப்புகள்கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கன்னிப்பருவத்திலே, ராணுவ வீரன், இதய கோவில்
வாழ்க்கைத்
துணை
புலியூர் சரோஜா

ஜி. சீனிவாசன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் 1970 கள் மற்றும் 1980 களில் துணை பாத்திரங்கள் மற்றும் எதிர் நாயகனாக நடித்துவந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்புகள் (1979) படத்தில் முதன்மை எதிர்நாயகனாக அறிமுகமானார். இவரது மனைவி நடன இயக்குனர் புலியூர் சரோஜா 70 மற்றும் 80, 90 களில் பிரபலமான நடன இயக்குநராக இருந்தார். இவர்களுக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள் உள்ளன. [1]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

இவர் எட்டு படங்களை எழுதியும், மூன்று படங்களை இயக்கியுமுள்ளார். ஆதூர்த்தி சுப்பா ராவின் உதவியாளராகத் இருந்த இவர், தாதா மிராசி மற்றும் கே. விஸ்வநாத் போன்ற பல்வேறு இயக்குநர்களுடன் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தமிழில் ராணுவ வீரன், பெண்மணி அவள் கண்மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். [2]

குடும்பம்[தொகு]

இவர் நடன இயக்குனர் புலியார் சரோஜாவை மணந்தார். இவர்களது ஒரே மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தார்.

கைது[தொகு]

சரோஜாவும் சீனிவாசனும் ராமாவரம் பகுதியில் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற பள்ளியை நடத்தி வருகின்றனர். பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் 5 வயது சிறுவன் சுவாதிராஜன் தவறி விழுந்து இறந்தான். போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, கழிவு நீர் தொட்டியை அலட்சியமாக சரியாக மூடாத்தற்காக பள்ளி நிறுவனர் நடிகர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். [3]

திரைப்படவியல்[தொகு]

இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1970 கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1975 அவள் ஓரு காவியம் அறிமுக படம்
1978 கிழக்கே போகும் ரயில் மருது
1979 புதிய வார்ப்புகள் பண்ணையார் வில்லனாக
1979 திசை மாறிய பறவைகள்
1979 கன்னிப்பருவத்திலே
1979 எணிப்பாடிகள்
1979 நல்லதொரு குடும்பம்

1980 கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1980 பூட்டாத பூட்டுகள்
1980 முரட்டுக்காளை
1981 சட்டம் ஒரு இருட்டறை
1981 ராணுவ வீரன்
1981 கடல் மீன்கள்
1981 வெளிச்சத்துக்கு வாங்க
1981 கிளிஞ்சல்கள்
1982 வாழ்வே மாயம்
1982 பரிட்சைக்கு நேரமாச்சு
1983 வெள்ளை ரோஜா
1983 தூரம் அதிகமில்லை
1984 வாய்ச் சொல்லில் வீரனடி
1984 பொழுது விடிஞ்சாச்சு
1985 படிக்காத பண்ணையார்
1985 ஸ்ரீ ராகவேந்திரா
1985 இதய கோவில்
1985 சிதம்பர ரகசியம்
1987 இவள் ஓரு தொடர் கதை
1987 இது ஓரு தொடர் கதை
1987 மனிதன்
1988 பெண்மணி அவள் கண்மணி
1988 பார்த்தால் பசு
1989 ராஜாதி ராஜா
1989 உரிமை கீதம்
1989 என்னெப் பெத்த ராசா

1990 கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1990 ராஜா எங்க ராஜா
1991 புதிய ராகம்
1992 காவல் கீதம்

2010 கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2005 ஐயா
2010 நகரம்
2011 வேங்கை கடைசி படம்

குறிப்புகள்[தொகு]

  1. "G.Sreenivasan". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 21 October 2013. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  2. Kumar, S. R. Ashok (25 December 2010). "Grill Mill: G. Srinivasan" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/cinema/Grill-Mill-G.-Srinivasan/article15608202.ece. 
  3. Staff (6 August 2006). "நடன இயக்குநர் புலியூர் சரேஜாவின் கணவர் கைது!". Oneindia (Tamil). பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சீனிவாசன்&oldid=3663568" இலிருந்து மீள்விக்கப்பட்டது