ராஜாதி ராஜா (1989 திரைப்படம்)
ராஜாதி ராஜா | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | ஆர். டி. பாஸ்கர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ராதா நதியா ஆனந்த்ராஜ் ஜனகராஜ் வினு சக்ரவர்த்தி ராதாரவி விஜயகுமார் ஒய். விஜயா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜாதி ராஜா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கினார்.[1] 1989 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்று 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
வகை
[தொகு]நடிகர்கள்
[தொகு]- ரஜினிகாந்த் - ராஜா மற்றும் சின்னராசு (இரட்டை வேடம்)
- ராதா - செங்கமலம்
- நதியா - லட்சுமி
- ராதாரவி
- விஜயா
- வசந்த்
- ஜனகராஜ்
- ஆனந்த்ராஜ்
- வினு சக்ரவர்த்தி
- பிரதீப் சக்தி
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து எஸ்டேட் திரும்பும் ராஜா, தனது தந்தையின் மரணம் பற்றி அறிந்து அதிர்ச்சி ஆகிறார். தனது நண்பனை தனக்குப் பதிலாக எஸ்டேட்க்கு அனுப்பி வைக்கிறார். இதை அறிந்த சதிகாரர்கள், அந்த நண்பனைக் கொன்று பழியை ராஜா மீது போடுகிறார்கள். சிறை செல்லும் ராஜா, உண்மையைக் கண்டுபிடிக்க அங்கிருந்து தப்புகிறார். வழியில் தன்னைப் போல் உருவ ஒற்றுமை கொண்ட மற்றொரு அப்பாவி மனிதனைக் காண்கிறார். தான் உண்மையான சதிகாரர்களைக் கண்டறியும் வரை , தனக்கு மாற்றாக சிறையில் இருக்குமாறு கேட்கிறார். பணத்தேவை கொண்ட அந்த அப்பாவியும் ஒப்புக் கொண்டு சிறை செல்கிறார். ராஜா உண்மையைக் கண்டறிந்தாரா , சதிகாரர்கள் சிறை சென்றார்களா என்று கதை செல்கிறது.
பாடல்கள்
[தொகு]இது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) | பாடலில் தோற்றம் |
1 | "எங்கிட்ட மோதாதே" | மனோ, சித்ரா | பொன்னடியான் | 04:51 | ரஜினிகாந்த், நதியா |
2 | "மாமா உன் பொண்ணக்கொடு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04:25 | ரஜினிகாந்த், நதியா |
3 | "மலையாளக் கரையோரம்" | மனோ | வாலி | 04:42 | ரஜினிகாந்த் |
4 | "மீனம்மா மீனம்மா" | மனோ, சித்ரா | பிறைசூடன் | 04:38 | ரஜினிகாந்த், ராதா |
5 | "வா வா மஞ்சள்" | மனோ, எஸ். பி. சைலஜா | இளையராஜா | 04:34 | ரஜினிகாந்த், ராதா |
வெளியீடு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ * http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=rajathi%20raja பரணிடப்பட்டது 2012-11-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Rajadhi Raja Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-02-10.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1989 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்
- பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- நதியா நடித்த திரைப்படங்கள்