அம்மன் கோவில் கிழக்காலே
அம்மன் கோவில் கிழக்காலே | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் [1] |
தயாரிப்பு | செல்வகுமார் எஸ். பி. பழனியப்பன் |
கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ராதா செந்தில் ரவிச்சந்திரன் ஸ்ரீவித்யா ராதாரவி |
ஒளிப்பதிவு | ராஜ ராஜன் |
படத்தொகுப்பு | சீனிவாஸ் கிருஷ்ணா |
கலையகம் | வி. என். எஸ். புரொடக்சன்சு |
விநியோகம் | வி. என். எஸ். புரொடக்சன்சு |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அம்மன் கோயில் கிழக்காலே (Amman Kovil Kizhakale) என்பது 1986ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தின் பெயரானது 1982ஆம் ஆண்டில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் வரும் அம்மன் கோயில் கிழக்காலே எனும் பாடல் வரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டதாகும்.[2]
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் – சின்னமணி
- ராதா – கண்மணி
- ரவிச்சந்திரன் – கண்மணியின் தந்தை
- ஸ்ரீவித்யா – கண்மணியின் தாயார்
- செந்தில்
- ராதாரவி
- வினு சக்ரவர்த்தி
- டி. கே. எஸ். சந்திரன்
- சூரியகாந்த்
- நளினிகாந்த்
வெளியீடு
[தொகு]1986 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படமாகும். தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் 150 நாட்களைத் கடந்தும், 20 திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது.
பாடல்கள்
[தொகு]இது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[3] அனைத்து பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | சின்னமணிக் குயிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04:24 |
2 | நம்ம கட வீதி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:13 | |
3 | காலை நேர (பெண்) | எஸ். ஜானகி | 04:49 | |
4 | காலை நேர (ஆண்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:21 | |
5 | ஒரு மூனு முடிச்சாலே | மலேசியா வாசுதேவன் | 04:36 | |
6 | பூவ எடுத்து | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | 04:31 | |
7 | உன் பார்வையில் | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | 04:07 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Amman Kovil Kizhakale, IMDb, பார்க்கப்பட்ட நாள் 2008-10-23
- ↑ ராம்ஜி, வி. (14 ஆகஸ்ட் 2020). "'இளமை இதோ இதோ', 'நிலா காயுது' , 'நேத்து ராத்திரி யம்மா'; 38 வருடங்களாக மனதில் நிற்கிறான் 'சகலகலா வல்லவன்'!". இந்து தமிழ்.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Amman Kovil Kizhakkale". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.
வெளியிணைப்புகள்
[தொகு]- 1986 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்