குங்குமச்சிமிழ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங்குமச்சிமிழ்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புதுரை
இராசப்பன்
ஸ்ரீனிவாசன்
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
இளவரசி
ரேவதி
வாகை சந்திரசேகர்
ஒளிப்பதிவுஇராஜராஜன்
படத்தொகுப்புபி. கிருஷ்ணகுமார்
ஸ்ரீறீனிவாஸ்
கலையகம்சன்பிளவர் கிரியேசன்ஸ்
வெளியீடுஆகத்து 23, 1985 (1985-08-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குங்குமச்சிமிழ் (Kunguma Chimil) ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மோகன், இளவரசி, ரேவதி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ராஜராஜன் ஆவார். துரை, ராசப்பன், ஸ்ரீநிவாசன் ஆகியோர் தயாரிப்பில், இளையராஜா இசை அமைப்பில், 23 ஆகஸ்ட் 1985 ஆம் தேதி வெளியானது.[1]

நடிகர்கள்[தொகு]

மோகன் (நடிகர்), இளவரசி (நடிகை), ரேவதி (நடிகை), சந்திரசேகர் (நடிகர்), டெல்லி கணேஷ், வி. கோபால கிருஷ்ணன், செந்தில், லூசு மோகன், டைப்பிஸ்ட் கோபு, சிவராமன், பயில்வான் ரங்கநாதன்.

கதைச்சுருக்கம்[தொகு]

ஆதரவற்ற பிலோமினா (இளவரசி (நடிகை)) செவிலியாக பணிபுரிந்து வருகிறாள். வளர்ப்பு தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, உயிருக்கு பயந்து, வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு செல்கிறாள். அந்த ரயில் பயணத்தின் பொழுது ரவி (மோகன் (நடிகர்)) என்ற மற்றொரு ஆதரவற்ற வாலிபனை சந்திக்கிறாள் பிலோமினா. இருவரும் காதலிக்கின்றனர்.

இருவரும் வறுமையில் இருக்கிறார்கள். டிப்ளமோ படித்திருந்தும், தகுதிக்கேற்ற வேலை ரவிக்கு கிடைக்கவில்லை. வறுமையின் காரணாமாக ரிக்க்ஷா வண்டி ஓட்டுகிறான்.

அந்நிலையில், ரவிக்கு வனப்பகுதியில் வேலை ஒன்று கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டும், குறைந்த காலக்கெடுவில் அதிக முன்பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை. அதனால் ரவிக்கு மேலும் பாரமாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்து, ரவியை விட்டு விலகி இருக்க முடிவு செய்கிறாள் பிலோமினா.

அந்த பிரிவின் சோகத்துடன் ரவி இருக்கும் பொழுது, ஒரு பை நிறைய பணம் கிடைக்கிறது. அது ஒரு பெண்ணின் திருமணத்திற்கான வரதட்சணை பணம் என்று பின்னால் தெரியவருகிறது. அந்த பெண்ணை சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது.

பின்னர், கிடைத்த பணத்தை வைத்து ரவி என்ன செய்தான்? ரவி-பிலோமினா ஜோடிக்கு என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் இளையராஜா ஆவார். வாலி (கவிஞர்) மற்றும் கங்கை அமரன் பாடல்களின் வரிகளை எழுதினர்.[2][3] "நிலவு தூங்கும்" என்ற பாடல் மோஹன ராகத்தில் அமைக்கப்பட்டது.[4]

பாடல்களின் பட்டியல்
ட்ராக் பாடல் பாடியவர் ஆசிரியர்
1 பூங்காற்றே தீண்டாதே எஸ். ஜானகி கங்கை அமரன்
2 நிலவு தூங்கும் நேரம் எஸ். பி. பி., எஸ் ஜானகி வாலி
3 நிலவு தூங்கும் நேரம் எஸ். பி. பி., எஸ் ஜானகி வாலி
4 கூட்ஸு வண்டியிலே மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி
5 கை வலிக்குது மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வலி
6 வைக்கலாம் நேத்தி மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் வாலி

வெளி-இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://www.oosai.com" இம் மூலத்தில் இருந்து 2009-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090928032850/http://www.oosai.com/tamilsongs/kunguma_chimizh_songs.cfm. 
  2. "http://play.raaga.com/". http://play.raaga.com/tamil/album/Kunguma-Chimizh-T0000295. 
  3. "http://www.starmusiq.com/" இம் மூலத்தில் இருந்து 2016-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161130105130/http://www.starmusiq.com/tamil_movie_songs_listen_download.asp?MovieId=1550. 
  4. "https://www.thehindu.com". https://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece.