உள்ளடக்கத்துக்குச் செல்

எங்கிட்ட மோதாதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்கிட்ட மோதாதே
சுவரிதழ்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புராஜேஷ்வரி சுந்தர்ராஜன்
கதைபஞ்சு அருணாசலம்
திரைக்கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஷோபனா
சரத்குமார்
குஷ்பூ
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புகே.ஆர்.ராமலிங்கம்
கலையகம்ராஜேஷ்வரி புரொடக்‌ஷன்ஸ்
விநியோகம்ராஜேஷ்வரி புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 14, 1990 (1990-09-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கிட்ட மோதாதே ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ராஜேஷ்வரி சுந்தர்ராஜன் தயாரிப்பில் 1990ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். விஜயகாந்த், ஷோபனா, சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2] இப்படத்தின் தலைப்பு ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய முந்தைய படமான ராஜாதி ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியில் இருந்து எடுக்கப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இளையராஜா இசையமைக்க பாடல்களை வாலியும், புலமைப்பித்தனும் எழுதியிருந்தனர்.[3] இப்படத்தில் இடம் பெற்ற சரியோ சரியோ" பாடல் மலையாளத் திரைப்படமான அதர்வம் படத்தில் வரும் "புகழோரத்தில்" பாடலின் மறுபதிப்பாகும்.

எண். பாடல்கள் பாடியவர்(கள்) எழுதியவர் நீளம் (m:ss)
1 அஞ்சு பைசா பத்து பைசா மலேசியா வாசுதேவன் வாலி 04.34
2 ஹேய் மாமா எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04.24
3 இவன் வீரன் சூரன் எஸ். ஜானகி வாலி 04.35
4 ஒன்னோடு ரெண்டுன்னு மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி 04.35
5 சரியோ சரியோ நான் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி 04.38
6 கை வீசம்மா கை வீசு சித்ரா வாலி 01.04

மேற்கோள்கள்

[தொகு]
  1. "En Kitta Modhadhey". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
  2. "En Kitta Modhadhey". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
  3. "Engitta Modhathe Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-25.

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கிட்ட_மோதாதே&oldid=4152698" இலிருந்து மீள்விக்கப்பட்டது