தூங்காத கண்ணின்று ஒன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூங்காத கண்ணின்று ஒன்று
சுவரொட்டி
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புகே. கோபிநாதன்
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமோகன்
அம்பிகா
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புஏ. செல்வநாதன்
கலையகம்பகவதி கிரியேசன்ஸ்
வெளியீடு4 பெப்ரவரி 1983 (1983-02-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தூங்காத கண்ணின்று ஒன்று (Thoongatha Kannindru Ondru) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் [1]இயக்கிய இப்படத்தை கே. கோபிநாதன் தயாரித்தார். இப்படத்தில் மோகன், அம்பிகா, வி. கே. ராமசாமி, எஸ். வி. சேகர் மற்றும் பலரும் நடித்தனர். [2][3]

நடிகர்கள்[தொகு]

பின்னணிக் குரல்[தொகு]

இப்படத்தில் நடிகர் மோகனுக்கு எஸ். என். சுரேந்தர் பின்னணி பேசியிருந்தார்.[4]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[5][6] பாடல் வரிகளை முத்துலிங்கம், அ. மருதகாசி மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் இயற்றினர்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்/கள் நீளம்
1. "நீ அழைத்தது போல்"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:09
2. "ஆடி வெள்ளம்"  அ. மருதகாசிமலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 4:31
3. "இதயவாசல்"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:32
4. "மழைவிழும்"  முத்துலிங்கம்கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 4:03
மொத்த நீளம்:
18:15

வெளியீடும் வரவேற்பும்[தொகு]

கல்கி இதழின் விமர்சகர் திரைஞானம், "இத்திரைப்படத் தலைப்பை உச்சரிப்பதில் உள்ள சிரமம் பார்ப்பதிலும் உண்டு" என்று எழுதியிருந்தார். [7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]