நதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நதியா மோய்டு
இயற் பெயர் சரீனா அனுஷா மோய்டு
வேறு பெயர் நதியா,
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1984-1994, 2004-தற்காலம்

நதியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.[1] தமிழ் தவிர மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனத்தில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சில.

குடும்ப வாழ்க்கை[தொகு]

இவர் பெற்றோர் கேரளத்தை சேர்ந்தோர். இவர் தமிழ், மலையாளம், மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். இவருக்கும் மராட்டியரான இவர் கணவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nadhiya gets a dream role". http://www.indiaglitz.com+(24 May 2008). பார்த்த நாள் 10 September 2012.

வெளி இணைப்பு[தொகு]

நதியா ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியா&oldid=2386832" இருந்து மீள்விக்கப்பட்டது