உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹிந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தி
हिन्दी, हिंदी
நாடு(கள்)இந்தியா மற்றும் பாகிஸ்தான். (இந்துஸ்தான்).
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதல் மொழி பேசுவோர்: ~ 49 மில்லியன் (2008)[1]
இரண்டாம் நிலை பேசுவோர்: 12–22 மில்லியன் (1999)[2]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
தேவநாகரி, Kaithi, Latin, and several regional scripts.
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா
மொழி கட்டுப்பாடுமத்திய ஹிந்தி இயக்குநரகம் (இந்தியா),[4]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hi
ISO 639-2hin
ISO 639-3hin
இந்தியாவில் ஹிந்தி பேசுவோரின் பரவல்

இந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று.[5] இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[6] பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

பரவல்

[தொகு]

இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான்,[7] அரியானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது. பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.

பேச்சு இந்தி

[தொகு]

எண்கள்

[தொகு]
  1. - ஏக் (एक) = ஒன்று
  2. - 'தோ (दो) = இரண்டு
  3. - தீன் (तीन) = மூன்று
  4. - சார் (चार) = நான்கு
  5. - பாஞ்ச் (पांच) = ஐந்து
  6. - சே (छः) = ஆறு
  7. - சாத் (सात) = ஏழு
  8. - ஆட் (आठ) = எட்டு
  9. - நௌ (नौ) = ஒன்பது
  10. - தஸ் (दस) = பத்து

100 - சௌ (सौ) = நூறு

1000 - ஹசார் (हजार) = ஆயிரம்

பொதுவானவை

[தொகு]
  • நமஸ்தே = வணக்கம்
  • கித்னா = எத்தனை ?
  • ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
  • நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
  • ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
  • ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
  • கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
  • கத்தம் ஹோகயா = முடிவடைந்து விட்டது.
  • கல் - நேற்று (அல்லது) நாளை
  • ஆப்கா நாம் க்யா ஹை = உங்கள் பெயர் என்ன?
  • மேரா நாம் ராம் ஹை = என் பெயர் ராம்.
  • மே தும்ஸே ப்யார் கர்தா/கர்தீ ஹூ = நான் உன்னை காதலிக்கிறேன்.
  • டீக் ஹை = சரி
  • தன்யவாத் = நன்றி

எழுத்துக்கள்

[தொகு]

இந்தி மொழி தேவநாகரி (देवनागरी लिपि தேவநாகரி லிபி) எழுத்துக்களில் எழுதப்படுகிறது. தேவநாகரி உயிரொலிகளையும், 33 மெய்யொலிகளையும் கொண்டுள்ளது. இது இடது பக்கத்தில் இருந்து வலமாக எழுதப்படுகிறது.

இந்தி சொற்களும் அவற்றின் தமிழ் கருத்துக்களும்

[தொகு]
தமிழ் இந்தி தமிழ் கருத்து
பாபு बापू அப்பா
மா(ன்) माँ அம்மா
பாயி भाई சகோதரன்
பஹன் बहन சகோதரி
பையா भैया அண்ணன்
தீதீ दीदी அக்கா
மே(ன்) मैं நான்
இந்தி சொற்களும் அதன் தமிழ் கருத்துக்களும் [a]
இந்தி தமிழ் தமிழ் கருத்து
बिजली பிஜ்லீ மின்சாரம்
क्रय க்ரய வாங்குதல்
खोलना கோல்னா திறத்தல்
पूर्व பூர்வ கிழக்கு
वाहन வாஹன் கார், வாகனம்
लाल லால் சிவப்பு
घोड़ा கோடா குதிரை
कुछ नहीं குச் நஹீ ஒன்றும் இல்லை
पक्षी பக்ஷீ பறவை
गर्म கர்ம் சூடு
जब ஜப் அப்போது
कहानी की भाषा கஹானீ கீ பாஷா பேச்சு மொழி
पतला खान பத்லா கான் மெல்லிய கான்
बुद्धा புத்த புத்தர்
काला காலா கறுப்பு
शीतल ஷீதல் குளிர்
खरगोश கர்கோஷ் முயல்
ईर्ष्या ஈர்ஷ்யா பொறாமை
सुनना ஸுன்னா கேள்
तथ्य தத்ய உண்மை
कछुआ கச்சுஆ ஆமை
चित्र சித்ர சித்திரம்
लड़ाई லடாஈ சண்டை, போர்
रस्सी ரஸ்ஸீ கயிறு
बहुत करीब பஹுத் கரீப் மிக நெருக்கமான, உறவு
लोहा லோஹா இரும்பு, உலோகம்
छवि சவி படம்
समूह ஸமூஹ் சமூகம்
मोड़ மோட் திரும்பு
भयानक பயானக் கெட்ட, பயங்கரமான
मस्तिष्क மஸ்திஷ்க் மூளை
मुर्गा முர்கா கோழி
कीमत கீமத் விலை
हंसी ஹன்ஸீ சிரிப்பு
हवा ஹவா காற்று
आम कमरा ஆம் கம்ரா பொதுவறை, அலுவலகம்
शोर ஷோர் சத்தம், குரல்
पठन பட்ன படித்தல்
शरीर ஷரீர் உடல்
बिन्दु பிந்து புள்ளி
बिल्ली பில்லீ பூனை
मकड़ी மக்டி பூச்சி
पुराना புராணா பழைய
कर सकता கர் சக்தா முடியும், இணைதல்
दस हजार தஸ் ஹஜார் பத்தாயிரம்
चोर சோர் திருடன்
निखात निधि நிகாத் நிதி புதையல்
देश தேஷ் நாடு
दवा தவா மருந்து
दो जोड़ी தோ ஜோடீ இரண்டு சோடி
संबंध ஸம்பந்த் தொடர்பு

ஆதாரங்கள்

[தொகு]
  1. 25மில்லியன் "non-Urdu கரிபோலி" and 400 million Hindi languages per 2001 Indian census data, plus 11 million Urdu in 1993 Pakistan, adjusted to population growth till 2008
  2. non-native speakers of Standard Hindi, and Standard Hindi plus Urdu, according to SIL Ethnologue.
  3. Dhanesh Jain (2003). இந்திய-ஆரியம். Routledge. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780700711307. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  4. மத்திய ஹிந்தி இயக்குநரகம் இந்தியாவில், இந்தி மொழி மற்றும் தேவநாகரி எழுத்து பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துகிறது. Source: Central Hindi Directorate: Introduction பரணிடப்பட்டது 2010-04-15 at the வந்தவழி இயந்திரம்
  5. "தேசிய தகவல் மையம்". Archived from the original on 2006-11-07. பார்க்கப்பட்ட நாள் 2005-07-10.
  6. நடுவன்அரசின் அலுவலக மொழி
  7. Hindi (2005). கீத் பிரவுன் [in ஆங்கிலம்] (ed.). மொழி மற்றும் மொழியியல்க் கலைக்களஞ்சியம் (2 ed.). Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-044299-4. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
இந்தி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்திப் பதிப்பு

பொது

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தி&oldid=4096476" இலிருந்து மீள்விக்கப்பட்டது