இந்துஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான்சனின் இந்துஸ்தான் அல்லது பிரித்தானிய இந்தியா வரைபடம், ஆண்டு 1864

இந்துஸ்தான்(About this soundஒலிப்பு ) மற்றும் அதன் சுருங்கிய வடிவமான இந்த்[1] ஆகிய வார்த்தைகள் இந்தியாவை குறிக்க பயன்படுத்தப்படும் பாரசீக பெயர்களாகும். இந்திய பிரிவினைக்கு பிறகு இந்திய குடியரசு பற்றி குறிப்பிட பயன்படுத்தப்படும் வரலாற்று ரீதியான பெயராக இது தொடர்கிறது.[2][3][4] இந்துஸ்தான் என்ற பெயரின் மற்றொரு பொருள் வட இந்தியாவின் இந்தோ-கங்கை சமவெளியை புவியியல் ரீதியாக குறிக்க பயன்படுத்தப்படுகிறது.[5]

சொற்பிறப்பியல்[தொகு]

இந்துஸ்தான் என்ற சொல் பாரசீகச் சொல்லான இந்துவிலிருந்து பெறப்பட்டதாகும். இச்சொல்லும் சமசுகிருத சொல்லான சிந்துவும் ஒரே பொருள் உடையவை ஆகும்.[6] அஸ்கோ பார்ப்போலாவின் கூற்றுப்படி முன் ஈரானிய சத்தமான *சி என்பது என்று பொ.ஊ.மு. 850 முதல் 600 ஆம் ஆண்டுகளில் மாற்றமடைந்தது.[7] இவ்வாறாக இருக்கு வேத கால சப்த சிந்தவா (ஏழு ஆறுகளின் நிலம்) அவெத்தாவில் அப்த இந்து என்று மாறியது. இது அகுரா மஸ்தாவால் உருவாக்கப்பட்ட "பதினைந்தாவது இராச்சியம்" எனக் கூறப்பட்டது. 'அதிக வெப்பம்' உடைய நிலம் என்று கூறப்பட்டது.[8] பொ.ஊ.மு. 515 ஆம் ஆண்டு முதலாம் டேரியஸ் சிந்து பகுதி (தற்கால சிந்து மாகாணம்) உள்ளிட்ட சிந்து சமவெளியை தனது அரசில் இணைத்துக்கொண்டார். பாரசீக மொழியில் இந்த இடம் இந்து என்று அழைக்கப்பட்டது.[9] முதலாம் செர்கசின் காலத்தில் சிந்து ஆற்றுக்கு கிழக்கில் இருந்த அனைத்து நிலப்பகுதிகளையும் குறிக்க "இந்து" என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.[6]

நடு பாரசீக மொழியில், அநேகமாக பொ.ஊ. முதலாம் நூற்றாண்டிலிருந்து பின்னொட்டான -ஸ்தான் என்ற சொல் இணைக்கப்பட்டது. இதற்கு ஒரு நாடு அல்லது பகுதி என்று பொருள். இவ்வாறாக தற்போதைய சொல்லான இந்துஸ்தான் உருவானது.[10] அண். பொ.ஊ. 262 ஆண்டின் போது முதலாம் சாபுரின் நக்‌சு-இ-ருசுதம் கல்வெட்டில் சிந்து என்பது இந்துஸ்தான் என்று குறிக்கப்பட்டது.[11][12]

வரலாற்றாளர் பி. என். முகர்ஜியின் கூற்றுப்படி ஒரு காலத்தில் சிந்து ஆற்றின் கீழ் வடி நிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான இந்துஸ்தான் படிப்படியாக விரிவடைந்து "கிட்டத்தட்ட அனைத்து இந்திய துணைக் கண்டத்தையும்" குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க-உரோமானியப் பெயரான "இந்தியா" மற்றும் சீனப் பெயரான சென்டு ஆகியவையும் இதேபோன்ற ஒத்த பரிணாமத்தை பின்பற்றின.[11][13]

பாரசீகச் சொல்லான இந்துவிலிருந்து பெறப்பட்ட அரேபியப் பதமான இந்த் பலுசிஸ்தானில் மக்கரான் கடற்கரையிலிருந்து இந்தோனேசிய தீவுக்கூட்டம் வரை உள்ள இந்தியமயமாக்கப்பட்ட பகுதிகளைக் குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்டது.[14] ஆனால் இறுதியாக அச்சொல்லும் இந்தியத் துணைக் கண்டத்தை அடையாளப்படுத்தக்கூடிய சொல்லாக மாறியது.

உசாத்துணை[தொகு]

  1. Kapur, Anu (2019) (in English). Mapping Place Names of India. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-429-61421-7. 
  2. "Sindh: An Introduction", Shaikh Ayaz International Conference – Language & Literature, 20 October 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது
  3. Sarina Singh (2009). Lonely Planet India (13, illustrated ). Lonely Planet. பக். 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781741791518. https://books.google.com/?id=vK88ktao7pIC&pg=PA276&dq=hindustan+zindabad#v=onepage&q=hindustan%20zindabad&f=false. 
  4. Christine Everaer (2010). Tracing the Boundaries Between Hindi and Urdu: Lost and Added in Translation Between 20th Century Short Stories (annotated ). BRILL. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004177314. https://books.google.com/?id=LqZ-6QRKc7wC&pg=PA82&dq=hindustan+zindabad#v=onepage&q=hindustan%20zindabad&f=false. 
  5. "Hindustan: Definition". Thefreedictionary.com. 15 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 Sharma, On Hindu, Hindustan, Hinduism and Hindutva (2002), ப. 3.
  7. Parpola, The Roots of Hinduism (2015), Chapter 9.
  8. Sharma, On Hindu, Hindustan, Hinduism and Hindutva (2002), ப. 2.
  9. Parpola, The Roots of Hinduism (2015), Chapter 1.
  10. Habib, Hindi/Hindwi in Medieval Times (2011), ப. 105.
  11. 11.0 11.1 Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent (1989), ப. 46.
  12. Ray & Chattopadhyaya, A Sourcebook of Indian Civilization (2000), ப. 553.
  13. Ray & Chattopadhyaya, A Sourcebook of Indian Civilization (2000), ப. 555.
  14. (Wink, Al-Hind, Volume 1 2002, ப. 5): "The Arabs, like the Greeks, adopted a pre-existing Persian term, but they were the first to extend its application to the entire Indianized region from Sind and Makran to the Indonesian Archipelago and mainland Southeast Asia."
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துஸ்தான்&oldid=3538938" இருந்து மீள்விக்கப்பட்டது