கோண்டி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோண்டி
நாடு(கள்) இந்தியா
பிராந்தியம் மத்தியப் பிரதேசம், ஆந்திரம், மஹாராஷ்டிரம், சத்தீஸ்கர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,000,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 gon
ISO 639-3 Variously:
gon — கோண்டி (பொது)
ggo — தென் கோண்டி
gno — வட கோண்டி

கோண்டி மொழி ஒரு முக்கியமான ஒரு நடு திராவிட மொழியாகும். நடு இந்தியாவிலுள்ள மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 2,000,000 மக்களால் பேசப்படுகிறது. இது கோண்டு இனத்தவரின் தாய்மொழியாக இருப்பினும் இவ்வினத்தவரில் அரைப்பகுதியினரால் மட்டுமே இப்போது இம்மொழி பேசப்படுகிறது.

கோண்டி மொழிக்கு எழுதப்பட்ட இலக்கியம் கிடையாது எனினும் இது ஒரு சிறப்பான நாட்டார் இலக்கியத்தைக் கொண்டுள்ளது. திருமணப் பாடல்கள், கதை கூறுதல் என்பன இவற்றுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இம்மொழி இரு பால் முறையைக் கொண்டது. தொடக்க ஒலிப்புடை வெடிப்பொலிகளையும் (voiced stops) (g, j, ḍ, d, b), மூச்சுடை வெடிப்பொலிகளையும் (aspirated stops) (kh, gh, jh, dh, ph) உருவாக்கியதன் மூலம் மூலத் திராவிட மொழியிலிருந்து இது விலகியுள்ளது.

பல கோண்டி மொழியின் கிளைமொழிகள் இன்னும் போதிய அளவு விளக்கப்படவோ அல்லது ஆவணப்படுத்தப்படவோ இல்லை. இதன் முக்கிய கிளைமொழிகள் டோர்லா, கோயா, மாரியா, முரியா, ராஜ் கோண்ட் என்பனவாகும். சில அடிப்படையான ஒலியியல் அம்சங்கள் வடமேற்குக் கிளைமொழிகளைத், தென்கிழக்குக் கிளைமொழிகளில் இருந்து வேறுபடுத்துகின்றன. வடக்கு, மேற்குக் கோண்டிகளில் தொடக்க ஸ், அப்படியே இருக்க, தெற்கு, கிழக்குக் கோண்டிகளில் இது ஹ்; ஆக மாறியுள்ளது. சில கிளைமொழிகளில் இது முற்றாகவே இல்லாதுபோயுள்ளது. கிளைமொழிகளிடையே உள்ள வேறுபாடுகளில், தொடக்க ர், ல் ஆகவும், , என்பன ஆகவும் மாறியுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோண்டி_மொழி&oldid=2056979" இருந்து மீள்விக்கப்பட்டது