கொற்கு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொற்கு மொழி
பிராந்தியம்நடு இந்தியா, (மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
478,000 (1997 ஆண்டில்)[1]  (date missing)
ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ksz

கொற்கு மொழி (Korku) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வாழும் கொற்கு என்னும் ஓரின மக்கள் பேசும் மொழி. இம்மொழி பேசும் கொற்கு மக்கள் மத்திய பிரதேசத்தில் பெத்துல், சிந்தவாரா ஆகிய மாவட்டங்களிலும், மகாராட்டிரம் மாநிலத்தில் சந்திரப்பூர் மாவட்டத்திலும் வாழ்கின்றனர். கோண்டு என்னும் மற்றுமோர் இனத்தவர் போல் இவர்களும் காடுகளை மிகவும் விரும்புகின்றவர்கள், என்றாலும், பெத்துல் மாவட்டத்தில் பைன்சுதேலி வட்டத்தில் வாழ்பவர்கள் சிறந்த வேளாண்மை, பயிர்த்தொழில் செய்பவராக இருக்கின்றனர். உருளைக்கிழங்கு பயிரிடுவதிலும், காப்பிப் பயிரிடுவதிலும் முன்னோடிகள் என்று கருதப்ப்படுகின்றனர்.


மொழி[தொகு]

கோண்டி என்னும் திராவிட மொழி பேசும் மக்கள் சூழ்ந்த பகுதியில், கோலாரியன் என்னும் முண்டா மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகிய கொற்கு மொழியைப் பேசும் இம்மக்கள் தனிக் குழுக்களாக வாழ்கின்றனர். கொற்கு மொழி மக்கள் வாழ்ந்த ஊர்ப் பகுதிகளுக்கு அருகே கால்ட்டோ அல்லது நிஃகாலி மக்களும் வாழ்து வந்திருக்கின்றனர். .[2] இப்பொழுது ஏறத்தாழ 478,000 மக்கள் கொற்கு மொழி பேசுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்தின்] நான்கு தென் மாவட்டங்களில் வாழ்கின்றனர்: கண்டுவா மாவட்டம்,ஃஆர்டா மாவட்டம், பெத்துல் மாவட்டம், ஓசங்காபாத் (Hoshangabad) மாவட்டம். இப்பகுதிகள் மட்டுமல்லாமல் மகாராட்டிரா மாநிலத்தின் மூன்று வடக்கு மாவட்டங்களிலும் வாழ்கின்றனர்: சந்திரப்பூர் மாவட்டத்தில் ராசூரா, கோர்ப்பனா வட்டங்கள், சந்திரப்பூர் மாவட்டத்தில் காட்சந்தூர் அருகே மணிக்கார் பஃகாட் ஆகிய பகுதிகள், அமராவதி மாவட்டம், புல்தானா மாவட்டம், அக்கோலா மாவட்டம்.

இம்மொழியில் பெயர்ச்சொற்கள் மூன்று பால்கள் கொண்டுள்ளன: ஆண்பால், பெண்பால், (ஆண்-பெண் அல்லா) நடுப்பால். பெயர்ச்சொற்களை மேலும் விரித்துக் சொல்லும் உரிச்சொற்கள் (எ.கா பெரிய வீடு), பெயர்ச்சொல்லுக்கு முன்னே வந்து விளக்கம் தரும். கொற்கு மொழி பேசுவோர் மெள்ள தம் மொழியை விட்டு இந்தி மொழி பேசுவோராக மாறி வருகின்றனர். இம்மொழி பேசுவோர், சிறு குழுக்களாக மரத்தால் கட்டப்பட்ட புல் வேய்ந்த சிறு குடில்களில் வாழ்கின்றனர். இம்மொழி பேசும் மக்களில் ஏறத்தாழ எல்லோரும் மகுவா (Mahua) மலர்களால் செய்யும் ஒருவகைக் கள்ளை பருகுகின்றனர்.

உசாத்துணை[தொகு]

  • Gordon, Raymond G., Jr. (ed.), Ethnologue: Languages of the World, Fifteenth edition 2005 (online version).

மேலும் படிக்க[தொகு]

  • Nagaraja, K. S. (1999). Korku language: grammar, texts, and vocabulary. Tokyo: Institute for the Study of Languages and Cultures of Asia and Africa, Tokyo University of Foreign Studies.
  • Deogaonkar, S. G., & Deogaonkar, S. S. (1990). The Korku tribals. Castes and tribes of India, 1. New Delhi, India: Concept Pub. Co. ISBN 8170222974
  • Zide, N. H. (1963). Korku noun morphology. [Chicago: South Asian Languages Program, University of Chicago.
  • Zide, N. H. (1960). Korku verb morphology. [S.l: s.n.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொற்கு_மொழி&oldid=2908624" இருந்து மீள்விக்கப்பட்டது