சிங்கீதம் சீனிவாசராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
பிறப்பு 21 செப்டம்பர் 1931
குதூர், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
இனம் தெலுங்கு
படித்த கல்வி நிறுவனங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
பணி திரைப்பட இயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதை எழுத்தாளர்
இசை அமைப்பாளர்
விருதுகள் தேசிய திரைப்பட விருது
தென்னிந்திய பிலிம்பேர் விருது
நந்தி விருது
கர்நாடகா அரசு திரைப்பட விருது

சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் (Singeetam Srinivasa Rao, பிறப்பு:21 செப்டம்பர் 1931) தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

சீனிவாசராவ் தெலுங்கு நயோகி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார். திரையுலகில் முதலில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் ஹரிந்திரநாத் சட்டோ பாத்யாய், கே.வி. ரெட்டி மற்றும் பிங்கலி நாகந்திரராவ் ஆகியோருடன் இணை இயக்குனராகப் பணியாற்றினார். மாயா பஜார் (1957), பெல்லி நாட்டி பிரமானலு (1958), ஜகதேக வீரணி கதா (1961), ஸ்ரீ கிருஷ்ணர்ஜுனா யுத்தம் (1963), சத்யா ஹரிச்சந்திரா (1965) முதலியன. 1972 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அறுபது திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

கன்னடத் திரைப்படப் பங்களிப்புகள்[தொகு]

இவரது இயக்கத்தில் கன்னட சூப்பர் ஹிட் படமான ஹாலு ஜெனு (1982), சலிசுவா மோடகளு (1982), எராது நட்சத்திரகளு (1983), ஷ்ராவன பந்து (1984), ஜவாலாமுகி (1985) பாக்கியலட்சுமி பரம (1985 )ஆனந்த் (1986), தேவத மனசுயா (1988), சிரஞ்சீவி சுதாகர (1988), ஷீரா சாகரா (1992), துவி துவி துவி (1999) மற்றும் மேக்-அப் (2002) ஆகிய படங்களை இயக்கினார் .

தெலுங்குத் திரைப்படப் பங்களிப்புகள்[தொகு]

1984 ஆம் ஆண்டு தெலுங்கு நடன வாழ்க்கைத் திரைப்படமான மயூரி தேசிய திரைப்பட விருது பெற்றது. 1988 ஆம் ஆண்டில் அவர் முதல் இந்திய மௌன திரைப்படமான புஸ்பக் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தேசிய பொழுதுபோக்கு விருது பெற்றது. தெலுங்கில் வெற்றி பெற்ற படமான அமெரிக்கா அம்மாயியும், அமெரிக்கா அப்பாயியும் வெற்றி பெற்றது. 1990 களின் நகைச்சுவைத் திரைப்படமான மைக்கேல் மதன காமராஜன் வசூலில் சாதனை படைத்தது .

தமிழ்த் திரைப்படப் பங்களிப்புகள்[தொகு]

தமிழில் கமலுடன் இணைந்து, தேசிய விருது பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) , மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை. சிங்கீதம் சீனிவாச ராவ் 2008 இல் 'கடோத்கஜ்" என்ற உயிரோவியத் திரைப்படத்தை இயக்கினார். இது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து 1989ல் உருவாக்கிய பல புதிய சாதனைகள் படைத்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]