ஊர் மரியாதை
ஊர் மரியாதை 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இதனை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இதில் சரத்குமார், நெப்போலியன், ஆனந்த், சசிகலா ஆகியோர் பிரதான தோற்றத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி .தேவா இசையமைத்திருந்தார்.[1][2]
கதைச்சுருக்கம் :
[தொகு]ரத்தினவேலு (சரத்த்குமார்) கிராமத்தில் மதிப்பு மிக்க நல்ல மனிதர்.வீரபாண்டியன் (நெப்போலியன்) பெண்பித்தராகவும் அனைவராலும் வெறுக்கப்படும் நபராகவும் இருக்கிறார்.
ரத்தினவேலு தனது சகோதரி மகள் ராசாத்தியை (சசிகலா) விரும்புகிறார் அதே வேளையில் அவரது உறவுப்பெண் காமாட்சி (சிந்து) ரத்தினவேலுவை விரும்புகிறார். இதனிடையில் நகரத்தில் படித்துவிட்டு வீரபாண்டியனின் சகோதரர் கண்ணன் (ஆனந்த்) ஊருக்கு வருகிறார். அவரும் ராசாத்தியை காதலிக்கிறார்.
இதற்கு முன்பாக, ராசாத்தியின் தந்தை சின்னராஜா (விஜயகுமார்) ஊரில் பட்டயம் கட்டப்பட்டு சிறந்த மனிதராக கவுரவிக்கப்படுகிறார். இது வீரபாண்டியின் தந்தை முத்துபாண்டிக்கு பிடிக்கவில்லை. சின்னராஜாவின் மீது வன்மம் கொண்டு அவரை கொல்ல முயல்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இறந்து விடுகின்றனர்.
கண்ணனுக்கும் ராசாத்திக்கும் உள்ள காதலை அறிந்த ராசாத்தியின் தாய் (ஸ்ரீவித்யா) ரத்தினவேலுவிற்கு ராசாத்தியை மணம் முடிக்கிறார். மறுநாள் கண்ணன் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்துவிடுகிறார். ராசாத்தி அதிர்ச்சி அடைகிறாள். வீரபாண்டியன் ராசாத்தியின் குடும்பத்தின்மீது வன்மம் கொண்டு பழி தீர்க்க நினைக்கிறார், அடுத்து என்ன நடந்தது எனபது படத்தின் உச்சபட்ச காட்சியாகும்.
நடிகர்கள் -பாத்திரங்கள்
[தொகு]- சரத் குமார் -ரத்தினவேலுவாக
- சசிகலா -ராசாத்தியாக
- நெப்போலியன் -வீரபாண்டியனாக
- ஆனந்த் -கண்ணனாக
- ஸ்ரீவித்யா -ராசாத்தியின் அம்மாவாக மேலும் ரத்தினவேலுவின் சகோதரியாக
- சிந்து -காமாட்சியாக
- கவுண்டமணி-மகாதேவனாக
- செந்தில் -உடன் நடிப்போராக
- வி.கோபாலகிருட்டிணன் -ஆறுமுகதேவராக
- டெல்லி கணேஷ் -வீரபாண்டியன் மாமாவாக
- விஜயகுமார்-சின்ன ராஜாவாக (சிறப்புத் தோற்றம் )
- கிட்டி -முத்துபாண்டியாக (சிறப்புத் தோற்றம் )
- குமரிமுத்து
- காந்திமதி-சின்னத்தாயாக
- கே.எஸ்.விஜய லட்சுமி -மஹாதேவன் மனைவியாக
- பிரதீபா
- ஆர்.என்.குமரேசன்
- டைபிஸ்ட் கோபு
- பயில்வான் ரங்கநாதன் -முனியாண்டியாக்
- கே.எஸ்.ரவிக்குமார்-ராக்கப்பனாக
- ராஜவேலு
இசைக்கோர்ப்பு விவரங்கள் :
[தொகு]- இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார் .பாடல்களை கவிஞர்.பழனி பாரதி எழுதியுள்ளார் .மொத்தம் ஆறு பாடல்கள்.1992 ஆம் ஆண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன .
- பாடல்கள் - பாடியவர்கள் ஒலி அலை நீளம்
- 1.எதிர்வீட்டு ஜன்னல் -மலேசியா வாசுதேவன் - 5 .24 நிமிடங்கள்
- 2.கிச்சிலி சம்பா -எஸ்.பி.பாலசுப்ரமணியம் -கே.எஸ்.சித்ரா - 5.03 நிமிடங்கள்
- 3.மலருது - கே.எஸ்.சித்ரா -எஸ்.ஏ .ராஜ்குமார் -4.56 நிமிடங்கள்
- 4.மரியாதை உள்ளவன் -கே.எஸ்.சித்ரா -5.05 நிமிடங்கள்
- 5.பளபளங்குது தாளதளங்குது - ஸ்வர்ணலதா -எஸ்.பி.ஷைலஜா -5.08 நிமிடங்கள்
- 6.உன்ன நான் தொட்டதுக்கு -எஸ்.பி.பாலசுப்ரமணியம் - -4.30 நிமிடங்கள்
வெளிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Oor Mariadhai (1992) Tamil Movie". spicyonion.com. Retrieved 21 June 2013.
- ↑ "Filmography of oor mariyathai". cinesouth.com. Retrieved 21 June 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- 1992 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- கே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்
- நெப்போலியன் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- சரத்குமார் நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்