அதிகாரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிகாரி
இயக்கம்பி. வாசு
தயாரிப்புகே. கனகசபை
கதைபி. வாசு
இசைகங்கை அமரன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புபி. மோகன் ராஜ்
கலையகம்ஜெயந்தி பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1991 (1991-04-14)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அதிகாரி (Adhikari) 1991இல் தமிழ் மொழியில் வெளிவந்த அதிரடித் திரைப்படம். இதை இயக்கியவர் பி. வாசு. இப்படத்தில் அருண் பாண்டியன், கௌதமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிக்க உடன், ஆனந்த், கவுண்டமணி, செந்தில், சேது விநாயகம், ஸ்ரீவித்யா, அஞ்சு, ராக்கி, ராஜேஷ் குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தயாரிப்பு கே. கனகசபை, இசை கங்கை அமரன். இது 14 ஏப்ரல் 1991இல் வெளியிடப்பட்டது.[1][2]

கதைச்சுருக்கம்[தொகு]

துரைப்பாண்டி (அருண் பாண்டியன்) சிறையில் இருந்து தப்பித்து தங்கக்கடத்தல் செய்யும் வரதப்பனை (சேது விநாயகம்) பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறான். துரைப்பாண்டியை சிறையில் தாக்குவதற்கு வரதப்பன் பல வழிகளில் முயற்சித்த போதிலும், அவரது அடியாட்கள் ஒவ்வொரு முறையும் தோல்வியடைகின்றனர். ஒரு தொலைதூர கிராமத்தில் மறைந்து வாழும் துரைப்பாண்டிக்கு பொன்னி (கௌதமி உதவுகிறாள். அங்கு, துரைப்பாண்டி தனது முன்னாள் நண்பன் அன்புவைச் சந்திக்கிறான். துரைப்பாண்டியை கண்டு ஓடிவரும்போது கார் ஒன்று அவன் மீது மோதுவதால் அன்பு இறந்து போகின்றான். அன்பு , பொன்னியின் சகோதரன். அவனது இறுதி சடங்குக்குப் பின்னர், வரதப்பனைப் பழிவாங்குவதற்கான தனது காரணத்தை பொன்னியிடம் துரைப்பாண்டி கூறுகிறான். தனக்கும் வரதப்பனுக்கும் ஏன் பிரச்சனை ஏற்பட்டது, நேர்மையான காவல் அதிகாரியான தான் எவ்வாறு சிறை செல்ல நேர்ந்தது என்பது பற்றி பொன்னிக்கு விளக்கினான். பின்னர், துரைப்பாண்டி வரதப்பனை கொலை செய்ய அவனை பின்தொடர்கிறான். ஆனால் துரைப்பாண்டியை கைது செய்ய காவல்துறையினர் பின் தொடர்கிறார்கள். முடிவில் என்ன ஆனது என்பது கதையின் முக்கியத்துவத்தை உருவாக்குகிறது.

நடிகர்கள்[தொகு]

அருண் பாண்டியன் - துரை பாண்டியாக
கௌதமி - பொன்னி
ஆனந்த் - சரத்தாக
கவுண்டமணி
செந்தில்
சேது விநாயகம் - வரதப்பனாக
ஸ்ரீவித்யா -துரை பாண்டியின் தாயாராக
அஞ்சு - சீதாவாக
ராக்கி - ராக்கியாக
ராஜேஷ் குமார் - ரகு
சௌத்த்ரி
அபிலாஷா - மேரியாக
கலைச் செல்வி
கீர்த்தி
பூர்ணம் விஸ்வநாதன்
டைப்பிஸ்ட் கோபு
ராஜ் மதன் - மருத்துவராக
மாஸ்டர் கௌதம் - ராக்கியின் மகன் கௌதம் விஷ்ணுவாக
விஜயகுமார் - காவல் அதிகாரி விஜயகுமாராக (சிறப்புத் தோற்றம்)
மஞ்சுளா விஜயகுமார் - மருத்துவர் மஞ்சுளாவாக (சிறப்புத் தோற்றம்)
பிரபுதேவா - சிறப்புத் தோற்றம்

ஒலித்தொகுப்பு[தொகு]

அதிகாரி
ஒலிப்பதிவு
வெளியீடு1991
ஒலிப்பதிவு1991
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்23:53
இசைத்தட்டு நிறுவனம்விஜய் மியூசிகல்ஸ்
இசைத் தயாரிப்பாளர்கங்கை அமரன்

இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைக்க 5 பாடல்களை வாலி (கவிஞர்) எழுத 1991இல் வெளியிடப்பட்டது.[3][4][5]

எண் பாடல் பாடியவர்கள் நேரம்
1 "ஆத்தோரம் பூந்தோப்பு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:58
2 "இந்த ராஜா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:17
3 "நையாண்டி மேளம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:48
4 "புருஷன் வீட்டில" மனோ, சுவர்ணலதா 4:45
5 "வீட்டுல யாருமில்ல" சுவர்ணலதா 5:05

மேற்கோள்கள்[தொகு]

  1. "Adhikari (1991) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  2. "Adhikari (1991)". gomolo.com. Archived from the original on 2016-11-20. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  3. "Adhikaari (Original Motion Picture Soundtrack) - EP by Gangai Amaran". itunes.apple.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  4. "Adhikaari songs". saavn.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
  5. "Adhikari movie songs". tamilthiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிகாரி_(திரைப்படம்)&oldid=3659265" இலிருந்து மீள்விக்கப்பட்டது