குசேலன் (திரைப்படம்)
குசேலன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | கை. பாலச்சந்தர் அஷ்வினி தத் விஜயகுமார் |
கதை | ஶ்ரீனிவாசன் |
இசை | ஜி. வி. பிரகாஷ்குமார் |
நடிப்பு | ரஜினிகாந்த் மீனா பசுபதி சந்தானம் லிவிங்ஸ்டன் வடிவேல் பிரபு எம். எஸ். பாஸ்கர் |
ஒளிப்பதிவு | அரவிந்த் கிருஷ்ணா |
வெளியீடு | ![]() |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குசேலன், ஆகஸ்ட் 1, 2008 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ரஜினிகாந்த், பசுபதி, மீனா, வடிவேல் முதலியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் பி. வாசு இயக்கினார். இத்திரைப்படம், மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற கதபறயும்போல் படத்தின் மீளுருவாக்கமாகும். மலையாளத்தில் மம்முட்டி நடித்த வேடத்தில் தமிழில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் 60 நிமிடங்கள் திரையில் தோன்றுகிறார்
நடிகர்கள்[தொகு]
- பசுபதி (நடிகர்) - பாலகிருஷ்ணன்
- ரசினிகாந்த் - அசோக்குமார்
- பிரபு - செந்தில்நாதன் (கௌரவத் தோற்றம்)
- ஸவ்யசாசி சக்ரவர்தி - பஷுபதி
- மீனா - ஶ்ரீதேவி
- வடிவேலு - சலூன் கடை சண்முகம்
- சந்தானம் - நாகர்கோயில் நாகராஜ்
- பிரம்மானந்தம் - கௌரவத் தோற்றம்
- ஜய் வப்லாணி - ராம் குண்டா
- நயன்தாரா
- கீதா - தலைமையாசிரியை
- மம்தா மோகன்தாஸ்- துணை இயக்குனர்
- விஜயகுமார் - சுயமாக
- நிழல்கள் ரவி - சுயமாக
- லிவிங்ஸ்டன் - குப்புசாமி
- ஆர். சுந்தர்ராஜன் - சீனிவாசன்
- மனோபாலா - கான்ஸ்டெபில்
- எம். எசு. பாசுகர் - குப்புசாமி துணையாள்
- சின்னி ஜெயந்த்
- மதன் பாப் - சுயமாக
- சந்தான பாரதி
- தியாகு
சிறப்புத் தோற்றங்கள்
- சூர்யா
- தனுஷ்
- நயன்தாரா
- குஷ்பூ
- சினேகா
- கைலாசம் பாலசந்தர்
- ஜி. வி. பிரகாஷ் குமார்
- சௌந்தர்யா ரஜினிகாந்த்
- பி. வாசு
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
முடி திருத்தும் ஏழைத் தொழிலாளிக்கும் (பசுபதி) முன்னணி திரைப்பட நடிகருக்கும் இடையேயான சிறுவயது நட்பு குறித்து இத்திரைப்படம் அமைந்துள்ளது. மலையூர் கிராமத்தில் முடி திருத்தும் கடை நடத்துகிறார் பசுபதி. அவரது மனைவி மீனா மற்றும் 3 குழந்தைகளுடன் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
அந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக வருகிறார் நடிகர் அசோக்குமார் ('ரஜினிகாந்த்). சூப்பர் ஸ்டார் நடிகரை பார்க்க ஊரே திரளுகிறது. அசோக்குமாரின் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்று ரசிகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் பால்யகால நண்பரான பசுபதி மட்டும் ரஜினியை பார்க்க தயங்குகிறார். ஊரில் உள்ள பலரும் அவரிடம், சூப்பர் ஸ்டாரிடம் போய் உதவி கேள் என்று சொல்கிறார்கள். 25 வருஷத்துக்கு பிறகு அவரை பார்த்தால் என்னையெல்லாம் அவருக்கு ஞாபகம் இருக்குமா? என்று தயங்கும் பசுபதி கடைசியில் சூப்பர் ஸ்டாரை எப்படி சந்திக்கிறார்? சூப்பர் ஸடார் தனது பால்ய கால் சினேகிதனை ஞாபகம் வைத்திருந்தாரா, அவருக்கு உதவி செய்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை[1].