ஆனந்த் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த்
பிறப்புஐதராபாத், தெலங்காணா, இந்திய ஒன்றியம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988 – தற்போது வரை
பிள்ளைகள்1

ஆனந்த் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் முக்கியமாகவும் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பல மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இன்றுவரை இவரின் மிகப் பெரிய படமாக மணிரத்னத்தின் அவல நகைச்சுவைத் திரைப்படமான திருடா திருடா உள்ளது. ஆனால் அந்த படத்தில் அவருடன் நடித் நடிகர்களைப் போலல்லாமல், அது இவருக்கு திருப்புமுனையை வழங்கத் தவறிவிட்டது. கமல்ஹாசனின் சத்யா மற்றும் விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் உள்ளிட்ட பல படங்களில் இரண்டாவது முக்கிய கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.[1]

தொழில்[தொகு]

1987 ஆம் ஆண்டில் இவர் வண்ணக் கனவுகள் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2][3] இவர் சத்யா (1988), அன்பே என் அன்பே (1988), அபூர்வா சகோதரர்கள் (1989), ஊர் மரியாதை (1992), தலைவாசல் (1992), திருடா திருடா (1993), எனக்கு 20 உனக்கு 18 (2003) போன்ற படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.[4][5]

ஆனந்த் மலையாள குறும்படமான ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்பதை தயாரித்து இயக்கியுள்ளார்.[6][7] இவர் குணச்சித்திர நடிகராக அண்மையில் நடித்த படைப்புகளில் 1: நேனோகாடின் (2014), ரிங் மாஸ்டர் (2014), இவன் மரியாதராமன் (2015), ஸ்ரீமந்துடு (2015), ஜெண்டில்மேன் (2016) போன்ற வெற்றிப் படங்கள் அடங்கும்.[8]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆனந்த் ஐதராபாத்தில் நான்கு மகன்களில் இளையவராக பிறந்தார். இவரது தந்தை வி. எஸ். பாரதி, புரூக் பாண்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார், இவரது தாயார் ராஜலட்சுமி குடும்பத் தலைவி. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிதி துணைத் தலைவரான பி. ரமேஷ், விவேகானந்தா கல்லூரியின் ஆங்கில ஆசிரியரான டாக்டர் பி. சுரேஷ், முன்னாள் இந்திய துடுப்பட்ட வீரரும் இப்போது இந்திய துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான பாரத் அருண் ஆகியோர் இவரது சகோதரர்கள். திருவனந்தபுரத்தில் ஜென்செரோ என்ற உணவகத்தையும் ஆனந்த் வைத்திருக்கிறார்.[6] [7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆனந்த் நடிகை பூர்ணிமாவை 2009இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாரதி என்ற மகன் உண்டு.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
1987 வண்ணக் கனவுகள் தமிழ்
1988 சத்யா தமிழ்
1988 பூந்தோட்ட காவல்காரன் தமிழ்
1988 அன்பே என் அன்பே தமிழ்
1988 அண்ணாநகர் முதல் தெரு தமிழ்
1988 சுதந்திர நாட்டின் அடிமைகள் தமிழ்
1989 அபூர்வ சகோதரர்கள் தமிழ்
1989 என் கணவர் தமிழ்
1989 தர்ம தேஜா தெலுங்கு
1990 நிலா பெண்ணே தமிழ்
1990 அதிசய மனிதன் தமிழ்
1990 கடப்பா ரெடம்மா தெலுங்கு
1990 அஞ்சலி தமிழ்
1991 மாஸ்டர் பிளான் ஆண்டனி Malayalam
1991 என் பொட்டுக்கு சொந்தக்காரன் தமிழ்
1991 அதிகாரி சரத் தமிழ்
1992 ஊர் மரியாதை கண்ணன் தமிழ்
1992 தலைவாசல் சுதாகர் தமிழ்
1992 முதல் குரல் தமிழ்
1993 சின்ன மாப்ளே மைதிலியின் கணவர் தமிழ்
1993 திருடா திருடா கதிர் தமிழ்
1993 நான் பேச நினைப்பதெல்லாம் ஆனந்த் தமிழ்
1994 முதல் பயணம் தமிழ்
1995 கிழக்கு மலை தமிழ்
1995 ஆண்டி தெலுங்கு
1995 அம்மாயி காப்புரம் தெலுங்கு
1995 ஸ்ட்ரிட் பைட்டர் தெலுங்கு
1996 அவதார புருஷன் ஆனந்த் தமிழ்
1996 மிருப்பு தெலுங்கு
1996 சிறீகரம் சந்திரம் தெலுங்கு
1996 அக்கா பாகுன்னாவா தெலுங்கு
1996 அம்மா நானா காவாலி தெலுங்கு
1996 பெல்லால ராச்சியம் கோபி தெலுங்கு
1998 கொண்டாட்டம் ஆனந்த் தமிழ்
1998 சொல்லாமலே ரியாஸ் தமிழ்
1998 சினேகிதடு தெலுங்கு
1999 நினைவிருக்கும் வரை ஆனந்த் தமிழ்
1999 மலபார் போலீஸ் ஆனந்த் தமிழ்
1999 சீனு ரியாஸ் தெலுங்கு
1999 உன்னருகே நானிருந்தால் ஆனந்த் தமிழ்
1999 ஆசையில் ஒரு கடிதம் ஆனந்த் தமிழ்
2000 வானத்தைப் போல தமிழ்
2000 என்னவளே ஆனந்த் தமிழ்
2001 தீவின்சண்டி தெலுங்கு
2001 லவ் சேனல் ஆனந்த் தமிழ்
2001 சிறீ மஞ்சுநாதா தெலுங்கு
கன்னடம்
2002 ரெட் இராதாகிருஷ்ணன் தமிழ்
2002 ராஜ்ஜியம் தமிழ்
2003 நாகா தெலுங்கு
2003 நீ மனசு நாக்கு தெலுசு சிறீதரின் மைத்துனன் தெலுங்கு
2003 எனக்கு 20 உனக்கு 18 சிறீதரின் மைத்துனன் தமிழ்
2004 ஸ்வேதா நாகு தெலுங்கு
2005 தி டைகர் சுதேவ் சச்சிதானந்த் ஐ.பி.எஸ்  — முசாஃபிர் மலையாளம்
2005 தொம்மனும் மக்களும் காளியப்பன் மலையாளம்
2005 உதயனனு தரம் தினேஷ் மலையாளம்
2006 எஸ் யுவர் ஹானர் டி.எப்ஒ. சரத் செட்டி மலையாளம்
2006 வர்கம் ஷெரிப் மலையாளம்
2006 சாக்கோ ராண்டமன் மலையாளம்
2006 ஒருவன் காவல் ஆய்வாளர் மாதவன் மலையாளம்
2007 பாயும் புலி ரவிசங்கர் மலையாளம்
2007 ஜூலை 4 வின்செண்ட் மலையாளம்
2007 இன்ஸ்பெகடர் கார்ட் சரவணன் மலையாளம்
2007 அலி பாய் பாஸ்கரன் மலையாளம்
2008 ஆண்டவன் சதாசிவன் மலையாளம்
2009 ஜோஷ் சத்தியாவின் தந்தை தெலுங்கு
2009 முத்திரை அழகர் தொண்டைமான் தமிழ்
2010 மேரிக்குண்டோரு குஞ்சாடு ஜானிகுட்டி மலையாளம்
2010 அட்வகேட் லட்சுமணன் லேடிஸ் ஒன்லி ஹரிதாஸ் மலையாளம்
2010 தாந்தோனி மலையாளம்
2010 தி திரில்லர் மாநகர காவல் ஆணையர் மன்மோகன் மலையாளம்
2010 அந்தரி பந்துவய்யா தெலுங்கு
2011 அர்ஜுணன் சாஸத்திரி மலையாளம்
2011 கிறிஸ்டியன் பிரதர்ஸ் ரெஞ்சித் மலையாளம்
2012 ஏதோ செய்தாய் என்னை நம்பி தமிழ்
2012 குஞ்சலியன் சுரேஷ் வர்மன் மலையாளம்
2012 அஜந்தா மலையாளம்
2012 மை பாஸ் மேத்யூ ஆப்ரகாம் மலையாளம்
2012 எம்.எல்.ஏ மணி பாதம் கிளாசம் குஸ்தியம் மலையாளம்
2013 ரீபியன் சிவ சுப்பிரமணியன் மலையாளம்
2013 குரொகடைல் லவ் ஸ்டோரி டி.எப்.ஒ மலையாளம்
2014 1: நேனோகாடின் சந்திரசேகர் தெலுங்கு
2014 ரிங் மாஸ்டர் இராஜு மலையாளம்
2015 இவன் மரியாதராமன் இந்திரசிம்மன்

சூரியசிம்மன்
மலையாளம்
2015 சீமந்துடு மேகனாவின் தந்தை தெலுங்கு
2016 கல்யாண வைபோகம் திவ்யாவின் தந்தை தெலுங்கு
2016 ஜெண்டில்மேன் ராம்பிரகாஷ் தெலுங்கு
2016 ஆட்டாடுகுண்டாம் ரா ஆனந்த் ராவ் தெலுங்கு
2016 ஓஷாம் கார்த்திகேயன் மலையாளம்
2017 மிஸ்டர் சாயின் தந்தை தெலுங்கு
2017 திக்கா மதன்மோகன் தெலுங்கு
2017 ரங்கூன் மாவட்ட வருவாய் ஆய்வாளர் சையத் நவாசுதின் தமிழ்
2017 உன்னதி ஒக்கடே சிந்தகி அபியின் தந்தை தெலுங்கு
2017 வில்லன் தினேஷ் தரகன் மலையாளம்
2017 யுத்தம் சரணம் தெலுங்கு
2018 வ்யாசாச்சி தெலுங்கு
2018 ஜுவா தெலுங்கு
2019 சை ரா நரசிம்ம ரெட்டி குமார மல்லாரெட்டி தெலுங்கு
2019 மகரிஷி ராமாவரம் மாவட்ட ஆட்சியர் தெலுங்கு
2019 டியர் காம்ரேட பாபியின் தந்தை தெலுங்கு
2020 ஐ.ஐ.டி கிருஷ்ணமூர்த்தி சீனிவாச ராவ் தெலுங்கு

தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் மொழி அலைவரிசை குறிப்புகள்
2000 நிப்புலண்டி நிஜம் தெலுங்கு ஈடிவி
2001 சிகரம் தமிழ் சன் தொலைக்காட்சி
2001 சூலம் தமிழ் சன் தொலைக்காட்சி
2004 ஆலிபழம் மலையாளம் சூர்யா தொலைக்காட்சி
2005 கடமட்டத்து கதனார் மலையாளம் ஏஷ்யாநெட்
2006 ஏழாம் கடலினக்கரே மலையாளம் ஏஷ்யாநெட்
2007 சுவாமி அய்யப்பன் மலையாளம் ஏஷ்யாநெட்
2010–2012 இதயம் தமிழ் சன் தொலைக்காட்சி
2011 தேவிமகாத்மியம் மலையாளம் ஏஷ்யாநெட்
2012 வீர மார்த்தாண்டவர்மா மலையாளம் சூர்யா தொலைக்காட்சி
2012 தோஸ்த் மலையாளம் கைரளி தொலைக்காட்சி
2015 ஸ்பந்தனம் மலையாளம் சூர்யா தொலைக்காட்சி
2015 7 ராத்திரிகள் மலையாளம் ஏஷ்யாநெட்
2016–2017 காயாம்குளம் கொச்சுன்னியுடே மக்கன் மலையாளம் சூர்யா தொலைக்காட்சி
2018 லஹிரி லஹிரி லஹிரிலோ தெலுங்கு ஈடிவி
2020-தற்போது அம்மாயாரியந்தே மலையாளம் ஏஷ்யாநெட்
2020-தற்போது அன்பே வா தமிழ் சன் தொலைக்காட்சி
2021-தற்போது ருத்ரமாதேவி தெலுங்கு ஸ்டார் மா

குறிப்புகள்[தொகு]

 

  1. "Google Groups". பார்க்கப்பட்ட நாள் 2020-04-07.
  2. "Rediff On The NeT, Movies: Our weekly box office update". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
  3. "rediff.com, Movies: Gossip from the southern film industry". Rediff. 2000-06-30. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
  4. Nayar, Parvathi (25 June 2010). "Jewel of Indian cinema". AsiaOne. http://www.asiaone.com/News/Latest+News/Asia/Story/A1Story20100625-223964.html. 
  5. Ramya Kannan (9 August 2002). "Facts on films". The Hindu இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140926102037/http://www.thehindu.com/thehindu/lf/2002/08/09/stories/2002080906920200.htm. 
  6. 6.0 6.1 "Actor Anand - official website". actoranand.com. Archived from the original on 24 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
  7. 7.0 7.1 "Anand". IMDB. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
  8. "Burglars strike at actor Anand's house". The Times of India. 2008-08-01. Archived from the original on 2013-11-19. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_(நடிகர்)&oldid=3592921" இலிருந்து மீள்விக்கப்பட்டது