கிழக்கு கரை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு கரை
இயக்கம்பி. வாசு
தயாரிப்புமோகன் நடராஜன்
வீ. சண்முகம்
கதைபீ.வாசு
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுரவிந்தர்
படத்தொகுப்புபீ.மோகன்ராஜ்
கலையகம்ஸ்ரீ ராஜகாளி அம்மன் என்ரபிரைசஸ்
வெளியீடுசெப்டம்பர் 20, 1991 (1991-09-20)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிழக்கு கரை என்பது 1991 இல் வெளியான இந்திய நாடகத்தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் பிரபு மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மோகன் நடராஜன் மற்றும் வீ.சண்முகம் ஆகியோரால் தாயாரிக்கப்பட்டது. தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 20/செப்டம்பர்/1991 ம் ஆண்டு வெளியானது.[1][2]

கதைச் சுருக்கம்[தொகு]

முரளி (பிரபு) மற்றும் சேகர் (சந்திரசேகர்) ஆகியோர் நண்பர்கள். முரளி சேகருக்காக தனது வேலையை விட்டுகொடுக்கிறான். சேகருக்கு சுங்க அதிகாரியாக வேலை கிடைக்க முரளி தனது சொந்த ஊருக்கு திரும்புகிறான். அங்கு அவனது மாமாவின் மகள் விஜயலட்சுமி (குஷ்பு) அவனை காதலிக்கிறாள். முரளியின் தந்தை ரங்கநாதன் (விஜயகுமார்) பிரபல கடத்தல்காரனாக வேலை பார்க்கிறார். ஒருவழியாக தனது தந்தையின் வேலைபற்றி முரளிக்கு தெரியவர வேலையை விட்டுவிடும்படி தனது தந்தையிடம் கேட்கிறான். தந்தையும் வேலையை விட்டுவிடுகிறார். இதற்கு பழிவாங்க முரளியின் தந்தை கொல்லபடுகிறார். அதன்பின்னர் முரளி பழிவாங்குவதுடன் கடத்தல் காரனாகவும் மாறுகிறான்.

நடிகர்கள்[தொகு]

  • பிரபு-முரளி
  • குஷ்பு-மகாலட்சுமி
  • சந்திரசேகர்- சேகர்
  • கவுண்டமணி-ராஜா (ஜாக்கி)
  • விஜயகுமார்-ரங்கநாதன் (முரளியின் தந்தை)
  • ஸ்ரீவித்யா-ஜானகி, முரளியின் தாய்
  • வெண்ணிற ஆடை மூர்த்தி -ராஜாவின் தந்தை
  • மோகன் நடராஜன்-குமார்
  • ரொக்கி-மைக்கேல்
  • கே.ராஜ்பிரீத்-டாகா
  • ஒரு விரல் கிருஷ்ண ராவோ-தங்குமிட முகாமையாளர்
  • எல்ஐசி நரசிம்மன்
  • கிங் கொங்-பொறின் பல்லி
  • உதய் பிரகாஷ்
  • ஜீ.எம் சுந்தர்
  • டிலிப்
  • வீர பாண்டியன்
  • பெருமாள்
  • ராதாகிருஷ்ணன்
  • வரலட்சுமி-ராஜாவினுடைய தாய்
  • பவிதா-மேரி
  • சர்மிலி
  • பேபி ஜெனிபர்

இசை[தொகு]

தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 1991 ம் ஆண்டு இசை வெளிடப்பட்டுள்ளது. வாலி இத்திரைப்படத்திற்கு 5 பாடல்களை எழுதியுள்ளார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]