உள்ளடக்கத்துக்குச் செல்

கூலி (1995 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூலி
இயக்கம்பி. வாசு
தயாரிப்புமாணிக்கம் நாராயணன்
கதைபி. வாசு
இசைசுரேஷ் பீட்டர்ஸ்
நடிப்புசரத்குமார்
மீனா
மனோரமா
ராதாரவி
கவிதா விஜயகுமார்
கவுண்டமணி
செந்தில்
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புபி. மனோஜ்ராஜ்
கலையகம்செவன்ட் சேனல் கம்யூனிகேசன்
விநியோகம்செவன்ட் சேனல் கம்யூனிகேசன்
வெளியீடு14 ஏப்ரல் 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கூலி (coolie) என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தை எழுதி இயக்கியவர் பி வாசு மற்றும் மாணிக்கம் நாராயணனால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்[1]. சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பு மற்றும் எம். சி. சேகர் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் 14 ஏப்ரல், 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது.[2]

கதைச்சுருக்கம்

[தொகு]

ராதா ரவி ஒரு பணக்கார தொழிலதிபர். ஊதிய உயர்வு கேட்ட் தொழிலாளர்களின் போராட்டத்தை அவர்களின் தலைவர் பொன்னம்பலத்தைக் கொண்டு சமாளித்து விடுகிறார். பொன்னம்பலம் தொழிலாளர்களை ஏமாற்றுகிறார். சரத் குமார் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு அவர்களின் தலைவராகிறார். சரத்குமாரின் நல்ல எண்ணங்களை கண்ட ராதாரவியின் மகள் மீனா அவரை நேசிக்கிறார். ராதாரவி, சரத்குமார் மீது கோபமாக இருந்தாலும், சரத் தொழிற்சங்கத் தலைவராக இருப்பதால், தன்னுடைய பக்கம் இருக்க கேட்டுக்கொள்கிறார். ஆனாலும் சரத் தான் ஒரு ஏழையாகவே இருக்க விரும்புவதாக கூறுகிறார். ராதா ரவியின் மகன் சரத் குமாரின் சகோதரியுடன் காதலில் விழுகிறார். இறுதியாக, ராதாரவி இத்திருமணத்தை நடத்திவைக்கிறார்.

திருமணத்திற்குப் பின், மும்பை வியாபாரத்தைத் தக்கவைக்க தனது மகனை ராதாரவி அனுப்புகிறார், ராதாரவி பல தந்திரங்களை செய்யும் தொழிலதிபராக மாறுகிறார். சரத் மற்றும் மீனா திருமணம் நடக்கிறது. சரத் மீண்டும் தொழிற்சாலைக்கு செல்கிறார். தவறான தொழிலாளியாக சரத்தை சித்தரிக்க முயலும் ராதாரவியின் திட்டம் வெளிப்படுகிறது. சரத் ​​குமாரை கொலை செய்ய பொன்னம்பலத்தை ஏற்பாடு செய்கிறார். ஆனால் ராதாரவியை கொலை செய்ய பொன்னம்பலம் திட்டமிடுகிறார். இறுதியில் சரத் வந்து பொன்னம்பலத்துடன் சண்டையிட்டு ராதாரவியை மீட்கிறார். முடிவில் மனந்திருந்தி சரத் ,மீனா மற்றும் தனது மருமகளையும் ஏற்றுக்கொள்கிறார்.

நடிகர்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "coolie movie". பார்க்கப்பட்ட நாள் 9 July 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Google Discussiegroepen". Groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலி_(1995_திரைப்படம்)&oldid=4026982" இலிருந்து மீள்விக்கப்பட்டது