உள்ளடக்கத்துக்குச் செல்

சேது விநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேது விநாயகம்
பிறப்புசேது விநாயகம்
(1949-08-18)18 ஆகத்து 1949
இறப்பு20 செப்டம்பர் 2009(2009-09-20) (அகவை 60)
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
Stage Actor
Television Actor
செயற்பாட்டுக்
காலம்
1981-2009
குறிப்பிடத்தக்க படைப்புகள்பாட்ஷா
ஊர்க்காவலன்
பெண்மணி அவள் கண்மணி
பாலைவன பறவைகள்

சேது விநாயகம் (Sethu Vinayagam) என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றிய திரைப்பட நடிகர் ஆவார். இவர் விசுவின் நாடக குழுவில் உறுப்பினராக இருந்தார். பெரும்பாலும் விசுவின் அனைத்து திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ள இவர், பல படங்களில் துணை வேடங்களில் எதிர்மறை வேடங்களில் தனது அடையாளத்தை பதித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் தில்லு முல்லு, புதிய தீர்ப்பு, ஊர்க்காவலன், சத்யா, மங்கை ஒரு கங்கை, பெண்மணி அவள் கண்மணி, பாலைவன பறவைகள், மகளிர் மட்டும், பாட்ஷா. [1] [2]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

தில்லு முல்லு படத்தில் ஒரு சிறிய காட்சியில் ரஜினிகாந்தின் நண்பர்களில் ஒருவராக இவர் நடித்துள்ளார். ‘பாட்ஷா’ படத்திலும் சிறிய வில்லன் வேடத்தில் நடித்தார்.

குடும்பம்

[தொகு]

சேது விநாயகத்திற்கு ஒரு மனைவியும் 4 மகள்களும் உள்ளனர்.

இறப்பு

[தொகு]

சேது விநாயகம் 20 செப்டம்பர் 2009 அன்று தனது 60 வயதில் நாட்பட்ட நோயால் இறந்தார். [3]

திரைப்படவியல்

[தொகு]

இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1980 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1981 தில்லு முல்லு சந்திரனின் நண்பர்
1984 வாய்ச் சொல்லில் வீரனடி
1984 நாணயம் இல்லாத நாணயம்
1984 சிம்ம சொப்பனம்
1985 புதிய தீர்ப்பு
1985 ராஜா யுவராஜா
1985 சிதம்பர ரகசியம்
1986 யாரோ எழுதிய கவிதை
1987 மனிதனின் மறுபக்கம்
1987 ஊர்க்காவலன்
1987 காவலன் அவன் கோவலன்
1987 மங்கை ஒரு கங்கை
1987 பெண்மணி அவள் கண்மணி
1988 சத்யா மரியப்பாவின் உதவியாளர்
1988 உரிமை கீதம்
1988 மாப்பிள்ளை சார்
1988 ஒருவர் வாழும் ஆலயம்
1988 புதிய வானம்
1988 தாயம் ஒண்ணு

1990 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1990 வேலை கிடைச்சுடுச்சு
1990 பாலைவன பறவைகள் வழக்கறிஞர்
1990 காவலுக்குக் கெட்டிக்காரன்
1990 நல்ல காலம் பொறந்தாச்சு
1991 நாடு அதை நாடு
1991 அதிகாரி
1991 அன்பு சங்கிலி
1991 இதய வாசல்
1991 குணா
1992 பட்டத்து ராணி
1992 சாமுண்டி
1992 வானமே எல்லை
1993 மறவன்
1993 உத்தமராசா
1993 நாளைய செய்தி
1993 முற்றுகை
1994 மகளிர் மட்டும் காவல் ஆய்வாளர்
1994 சத்தியவன்
1994 சாது
1995 பாட்ஷா கல்லூரித் தலைவர்
1996 அருவா வேலு
1996 கோயமுத்தூர் மாப்ளே
1996 டேக் இட் ஈசி ஊர்வசி
1996 செங்கோட்டை
1998 உளவுத்துறை கிருஷ்ணமூர்த்தியின் முதலாளி

2000 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2000 உயிரிலே கலந்தது
2000 முகவரி திரைப்பட தயாரிப்பாளர்
2001 சிகாமணி ரமாமணி
2001 ஆனந்தம் சுசீலாவின் தந்தை
2001 சிட்டிசன் அமைச்சர்
2003 வடக்கு வாசல்
2003 கலாட்டா கணபதி
2003 சாமி ஆறுசாமியின் வழக்குரைஞரின் தந்தை
2004 கேம்பஸ்
2006 வஞ்சகன்
2006 மழை
2006 கொக்கி
2007 இப்படிக்கு என் காதல்
2008 சாது மிரண்டா
2008 ரகசிய சினேகிதனே
2008 பட்டைய கெளப்பு
2008 தித்திக்கும் இளமை
2008 வேள்வி
2009 ஒரே மனசு
2009 குடியரசு
2009 வைதேகி கடைசி படம்

குறிப்புகள்

[தொகு]
  1. "Sethu Vinayagam". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
  2. "All you want to know about #SethuVinayagam". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
  3. "Ace Actor Sethu Vinayagam is no more". Kollywood Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2009-09-29. Archived from the original on 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேது_விநாயகம்&oldid=3584568" இலிருந்து மீள்விக்கப்பட்டது