சுகன்யா (நடிகை)
சுகன்யா | |
---|---|
பிறப்பு | ஆர்த்திதேவி 9 சூலை 1970[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1991 2010 வரை |
பெற்றோர் | தந்தை : ரமேஷ் தாயார் : பாரதி |
வாழ்க்கைத் துணை | ஶ்ரீதர ராஜகோபாலன் (2002–2003) (மணமுறிவு)[2] |
விருதுகள் | பிலிம்பேர் விருது– மலையாளம், தமிழ்நாடு சிறந்த நடிகைக்கான விருது |
சுகன்யா (Sukanya பிறப்பு: 09 ஜீலை, 1970[3]) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்து ரசிகர்கள் சுகன்யாவுக்கு லேடி கமல்ஹாசன் என்று பெயர் வைத்தார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
- சென்னையில் வாழ்ந்த ரமேஷ்–பாரதி இணையரின் மூத்த மகளாக 9 ஜீலை 1970 ஆம் நாள் ஆர்த்திதேவி என்ற இயற்பெயருடன் பிறந்தார்.
- இவர் நடித்த முதல் திரைப்படமான புது நெல்லு புது நாத்து திரைப்படத்திலிருந்து இயக்குனர் பாரதிராஜாவால் சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையுலகில் நுழைந்தார்.
- சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
- இவா் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினாா். அதன் பிறகு சன் டி.வி யில் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கினாா். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.
- இவர் புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- இவர் மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
திருமண வாழ்க்கை[தொகு]
சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.[4] பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவு பெற்றனர்.
நடித்த திரைப்படங்கள்[தொகு]
தமிழ் திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1991 | புது நெல்லு புது நாத்து | கிருஷ்ணவேணி | அறிமுக திரைப்படம் |
1991 | எம். ஜி.ஆர் நகரில் | சோபனா | |
1992 | சின்ன கவுண்டர் | தெய்வானை | |
1992 | கோட்டைவாசல் | வசந்தி | |
1992 | திருமதி பழனிச்சாமி | அம்சவேணி | |
1992 | தம்பி பொண்டாடி | சுமதி | |
1992 | செந்தமிழ் பாட்டு | துர்காதேவி | |
1992 | இளவரசன் | பூங்கோதை | |
1992 | சோலையம்மா | சோலையம்மா | |
1993 | சின்ன மாப்ளே | ஜானகி | |
1993 | வால்டர் வெற்றிவேல் | சுமதி | |
1993 | உடன் பிறப்பு | பவானி | |
1993 | ஆதித்யன் | ராசாத்தி | |
1993 | சர்க்கரைதேவன் | சரசு | |
1993 | கருப்பு வெள்ளை | சுவர்ணா | |
1993 | தாலாட்டு | ரேவதி | |
1993 | சின்ன ஜமீன் | சத்யா | |
1994 | கேப்டன் | உமா | |
1994 | சீமான் | பாக்கியம் | |
1994 | ஹீரோ | சீதா | |
1994 | வண்டிச்சோலை சின்ராசு | பார்வதி | |
1994 | மகாநதி | யமுனா | |
1994 | ராஜபாண்டி | ராணி புவனா | |
1995 | மிஸ்டர். மெட்ராஸ் | மீரா | |
1996 | மகாபிரபு | மகாலட்சுமி | |
1996 | இந்தியன் | அமிா்த வள்ளி | |
1996 | புதிய பராசக்தி | பராசக்தி | |
1996 | பரிவட்டம் | ||
1996 | சேனாதிபதி | மீனாட்சி | |
1996 | ஞானப்பழம் | ஆா்த்தி | |
1997 | ஆஹா | கீதா | |
1997 | கோபுரதீபம் | மீனா | |
1997 | தம்பிதுரை | ||
2000 | குட்லக் | தேவி | |
2001 | கிருஷ்ணா கிருஷ்ணா | பாமா | |
2001 | ஶ்ரீபண்ணாரி அம்மன் | சிறப்புத் தோற்றம் | |
2004 | அடிதடி | ||
2006 | சில்லுனு ஒரு காதல் | நிர்மலா | |
2007 | தொட்டால் பூ மலரும் | பெரிய நாயகி | |
2008 | ஆயுதம் செய்வோம் | லீலாவதி | |
2008 | எல்லாம் அவன் செயல் | ||
2009 | அழகர் மலை | ||
2013 | சந்திரா | ||
2014 | என்னமோ நடக்குது | காயத்ரி |
தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]
- சுவாமி ஐயப்பன் (ஏசியாநெட்)
- ஆனந்தம் (சன் தொலைக்காட்சி) - சாந்தி
- ஜன்னல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [https://m.timesofindia.com/topic/Sukanya Sukanya Actress]. Times of India. https://m.timesofindia.com/topic/Sukanya. "Sukanya Actress Born - July 09, 1969 in Chennai, Tamil Nadu, India"
- ↑ "விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகை சுகன்யா கணவர் மேல்முறையீடு".
- ↑ [https://m.timesofindia.com/topic/Sukanya Sukanya Actress]. Times of India. https://m.timesofindia.com/topic/Sukanya. "Sukanya Actress Born - July 08, 1969 in Chennai, Tamil Nadu, India"
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-17 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- 1969 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- சென்னை நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்