முகேஷ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகேஷ்
MUKESH.jpg
2011இல் முகேஷ்
கேரள சட்டமன்றத்தின் சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 மே 2021 (2021-05-20)
முன்னவர் பி. கே. குருதாசன்
தொகுதி கொல்லம்
தனிநபர் தகவல்
பிறப்பு முகேஷ் மாதவன்
5 மார்ச்சு 1956 (1956-03-05) (அகவை 67)
பட்டத்தனம், கொல்லம், கேரளம், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்)
உறவினர் திவ்யதர்ஷன் (உறவினர்)
பிள்ளைகள் 2
பெற்றோர்
 • ஓ. மாதவன்
 • விஜயகுமாரி
பணி

முகேஷ் ( Mukesh ) (பிறப்பு: 1956 மார்ச் 5) முகேஷ் மாதவன் என்ற பெயரில் பிறந்த இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். மலையாளத் திரைப்படத்துறையில் இவரது பணிக்காக பெரிதும் அறியப்பட்டவர். நகைச்சுவை வேடங்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.[1] கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவராக இருந்தார். கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதியை 2016 மற்றும் 2021இல் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்ட மன்ற உறுப்பினரானார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

முகேஷ் நடிகர்களான ஓ. மாதவன் மற்றும் விஜயகுமாரி ஆகியோருக்கு 5 மார்ச் 1956 அன்று கேரளாவின் கொல்லத்தில் பிறந்தார்.[3] தங்கசேரி குழந்தை ஏசு பள்ளியில் பயின்ற இவர் கொல்லத்தில் உள்ள ஸ்ரீ நாராயண கல்லூரியில் அறிவியல் இளங்கலை படித்தார். திருவனந்தபுரம் கேரள சட்ட அகாதமி சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்தார்.[4]

இவர் 1988 ஆம் ஆண்டில் தென்னிந்திய திரைப்பட நடிகை சரிதாவை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[5][6] சரிதாவுடனான திருமண வாழ்க்கை முறிந்து, 2011இல் இவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.[7]

முகேஷ் 24 அக்டோபர் 2013 அன்று நடனக்கலைஞர் மேதில் தேவிகாவை இரண்டாவதாக மணந்தார்.[8]

இவர் 2016 தேர்தலில் கொல்லம் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 2021இல் மீண்டும் இதே கொல்லம் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டார்.

2016 தேர்தல் பிரச்சாரத்தின் போதுகொல்லத்தில் முகேஷ்,

குறிப்புகள்[தொகு]

 1. "താരങ്ങളുടെ കിടപ്പറയില്‍ ഒളിഞ്ഞു നോക്കുന്നവരുണ്ട്‌". mangalam.com. 2013-06-03. 2014-03-19 அன்று பார்க்கப்பட்டது.
 2. https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS11124.htm?ac=124
 3. "KLA Title M. Mukesh" (PDF). Fourteenth Kerala Legislative Assembly. 12 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Mukesh's profile". cinedairy.com. 8 ஜூலை 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Mukesh - Malayalam actors who have married more than once". The Times of India. 18 March 2018. 9 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
 6. mangalam. "Mangalam - Varika 3-Feb-2014". Mangalamvarika.com. 2016-03-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-19 அன்று பார்க்கப்பட்டது.
 7. mangalam. "Mangalam - Varika 3-Feb-2014". Mangalamvarika.com. 19 மார்ச்சு 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 17 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
 8. "ഇത് ഞങ്ങള്‍ കാത്തിരുന്ന വിവാഹം - articles,infocus_interview - Mathrubhumi Eves". Mathrubhumi.com. 18 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-19 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Kerala Assembly polls: Actors in the fray" (in en-IN). The Hindu. 19 May 2016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/kerala2016/kerala-assembly-polls-actors-in-the-fray/article8620389.ece. 
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
முகேஷ்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகேஷ்_(நடிகர்)&oldid=3673188" இருந்து மீள்விக்கப்பட்டது