உள்ளடக்கத்துக்குச் செல்

47 நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
47 நாட்கள்
இயக்கம்கே.பாலச்சந்தர்
கதைசிவசங்கரி
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்புசிரஞ்சீவி
ஜெயப்பிரதா
சரத்பாபு
ரமாப்பிரபா
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன்.ஆர்.கிட்டு
நாடுஇந்தியா
மொழி
  • தமிழ்
  • தெலுங்கு

47 நாட்கள் (47 Natkal) : சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சரத்பாபு மற்றும் ரமாப்பிரபா ஆகியோர் நடித்து, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 இல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். தெலுங்கு மொழியில் நடிகை சரிதா கெளரவ வேடத்தில் நடித்து 47 ரோஜ்லு. என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சிரஞ்சீவி தமிழில் அறிமுகமானார்.

கதை சுருக்கம்

[தொகு]

சிறிய நகரத்தில் வசித்துவரும் வைசாலியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்காக நடிகை சரிதா (சரிதா) அவரை அணுகுகிறார். அவரிடம் வைசாலி (ஜெயப்பிரதா) வெறிபிடித்தவள் போல கோபமாக கூச்சலிடுகிறாள். இப்பொழுது ஃப்ளாஷ்பேக் முறையில் கதை பின்னோக்கி நகர்கிறது. வைசாலியின் சகோதரன் சரிதாவிடம் குமாருடனான (சிரஞ்சீவி) வைசாலியின் 47 நாட்களிலேயே முடிந்த திருமண வாழ்க்கையைப் பற்றி கூறத்தொடங்குகிறார். குமார் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்திற்கு 30 கி.மீ தொலைவிலுள்ள ஃபெரோலஸ் என்ற ஊரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறான். வைசாலிக்கு தமிழ் தவிர ஆங்கிலமோ, பிரன்ஞ்ச் மொழியோ தெரியாது. குமாருக்கு ஏற்கனவே லூஸி என்பவருடன் திருமணமாகி அதே குடியிருப்பில் மேல் மாடியில் வசித்து வருகிறான். வைசாலியிடம் லூஸியை தன்னுடைய தோழி எனவும், லூஸியிடம் வைசாலி தனது தங்கை என இரு மனைவியிடமும் ஏமாற்றி வருகிறான். ஒரு சமயத்தில் வைசாலிக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. தான் இரண்டாவது மனைவியாக இருக்க முடியதென குமாரிடம் தெரிவித்துவிடுகிறாள். அவளுக்கு மொழி தெரியாதென்பதால் எவரிடமும் கூறி இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் தவிக்கிறாள்.

இதற்கிடையில் குமார் வைசாலியை தனது தங்கையாக நடிக்குமாறு மிரட்டி கொடுமைப்படுத்துகிறான். அவளை மனிதாபமற்ற முறையில் நடத்துகிறான். சிகரெட்டால் அவளது விரல்களை பொசுக்கியும், எரியும் அடுப்பில் அவளது உள்ளங்கைகளை காட்டியும், ஒரே படுக்கையில் படுக்காதவாறும் துன்புறுத்துகின்றான். இதை கண்ணுற்ற ஒரு பிக்பாக்கெட் திருடியான ரமாபிரபா குமார் இவ்வாறு முறைகேடாக நடத்துவதை சங்கர் (சரத்பாபு) என்ற இந்திய மருத்துவரிடம் கூறுமாறும் அவர் அவளுக்கு உதவலாம் எனவும் தெரிவிக்கிறாள். இதற்கிடையில் வைசாலி கர்ப்பமடைகிறாள். லூசி தான் ஏமாற்றுவதை கண்டுபிடித்துவிடுவாளோ என குமார் பயப்படுகிறான். வைஷாலிக்கு பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறான் டாக்டர் ஷங்கர் அவளை காப்பாற்றி, குமாரின் இருதார மணத்தைப் பற்றி லூசியிடம் தெரிவித்துவிடுகிறார். குமாரைப் பற்றியறிந்த லூசி தனது திருமண மோதிரத்தை ஆற்றில் வீசிவிட்டு அனுடனான தனது பந்தத்தை முறித்துக்கொள்கிறார்.

டாக்டர் ஷங்கர் குமாரிடமிருந்து வைஷாலியை இந்தியாவிலுள்ள அவளது அண்ணனுடனும், அம்மாவுடனும் கொண்டு சேர்க்கிறார். அவளது கர்ப்பத்திற்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் எந்த குறிப்பும் திரைப்படத்தில் இல்லை. ஒருவேளை அவள் பின்னர் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்று நாமாக ஊகித்துக்கொள்ளலாம். அவள் எந்தவொரு விதத்திலும் தனது முன்னாள் கணவர் குமாருடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை எனத்தெரிகிறது. அவள் ஏன் டாக்டர் ஷங்கரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என சரிதா கேட்பதற்கு. வைஷாலி, ஒரு பெண் எப்போதும் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று கோபமாக பதில் கூறுகிறாள். சரிதா அவளை சமாதானப்படுத்துகிறார். இருப்பினும், சினிமாவில் அவரது கதாபாத்திரம் மறுமணம் செய்துகொள்வதைப் போல காட்டப்பட்டால் வைஷாலி ஒன்றும் கவலைப்படமாட்டாள் என்று கதையை முடிக்கிறார்.[1]

நடிப்பு

[தொகு]

தயாரிப்பு நிறுவனம்

[தொகு]
  • தயாரிப்பு நிறுவனம்: பிரேமாலயா பிக்சர்ஸ்
  • வெளிப்புற படபிடிப்பு: பிரசாத் புரடக்சன்ஸ்
  • திரைப்பட செயலாக்கம்: பிரசாத் கலர் லாபராட்டரீஸ்

தயாரிப்பு

[தொகு]

சிவசங்கரி எழுதிய47 நாட்கள் என்ற நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டது.[2] சிரஞ்சீவி தமிழில் அறிமுகமானார்.[3] ஒரே சமயத்தில் தெலுங்கு மொழியில் 47 ரோஜ்லு. என்ற பெயரிலும் வெளிவந்தது.[4]

இசை

[தொகு]

தமிழ் பதிப்பு

[தொகு]

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.

எண் பாடல் பாடகர்கள்
1 "மான் கண்ட சொர்க்கங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "இவள் உனை நினைக்கும்போதே" வாணி ஜெயராம்
3 "தொட்டு கட்டிய மாப்பிள்ளை" எஸ். பி. பாலசுப்பிரமணியம்; வாணி ஜெயராம்

தெலுங்கு பதிப்பு

[தொகு]

கவிஞர் ஆச்சார்ய ஆத்ரேயா எழுதி இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "47 Natkal". British Film Institute. Archived from the original on 2011-11-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-19.
  2. Padmanabhan, Geeta (2006-03-25). "There's truth in her fiction". The Hindu (Chennai). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/theres-truth-in-her-fiction/article3189614.ece. 
  3. Narayanan, Sujatha (6 January 2017). "Chiranjeevi is back with Khaidi No 150: How the megastar came to rule the Telugu film industry". Firstpost. https://www.firstpost.com/entertainment/chiranjeevi-is-back-with-khaidi-no-150-how-the-megastar-came-to-rule-the-telugu-film-industry-3191112.html. 
  4. "Under-rated performances revisited on Chiranjeevi’s 60th b’day" (in en-US). The Indian Express. 2015-08-21. http://indianexpress.com/article/entertainment/regional/under-rated-performances-revisited-on-chiranjeevis-60th-bday/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=47_நாட்கள்&oldid=4092804" இலிருந்து மீள்விக்கப்பட்டது