ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு வீடு இரு வாசல்
இயக்கம்கே. பாலசந்தர்[1]
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி[2]
கதைஅனுராதா ரமணன் (கதை 1)
அனந்து (கதை 2)
திரைக்கதைகே’ பாலசந்தர்
இசைவி. எஸ். நரசிம்மன்[2]
நடிப்புயாமினி
கணேஷ்
குமரேஷ்
லிவிங்ஸ்டன்
சூர்யா
வைஷ்ணவி
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
படத்தொகுப்புகணேஷ் குமார்
கிஷோர் குமார்
கலையகம்கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ்
விநியோகம்கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 7, 1990 (1990-09-07)[2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு வீடு இரு வாசல் (Oru Veedu Iru Vasal) 1990 இல் வெளியான இந்திய தமிழ்த் திரைப்படம். கே. பாலசந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யாமினி, வைஷ்ணவி, சூர்யா, கணேஷ், குமரேஷ் நடித்துள்ளனர்.[2] இத்திரைப்படம் இரு தனித்தனிக் கதைகளைக் கொண்டது. இரண்டிற்குமான இணைப்பு படத்தின் இறுதியில் காட்டப்படுகிறது. மூலக்கதை தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய புதினமாகும். 38 ஆவது தேசிய திரைப்பட விழாவில் இத்திரைப்படம் பிற சமூகப் பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.

கதைக் கரு[தொகு]

இத்திரைப்படம் இரு தனிக்கதைகளை உள்ளடக்கியது. இரு கதைகளும் ஆணாதிக்கமிக்க இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சித்தரிக்கிறது. இரு கதைகளின் நாயகிகளும் தங்கள் கணவர்களால் படும் துன்பங்களை ஒரு எல்லைக்கு மேல் தாங்க முடியாமல் தங்களுக்கான வாழ்க்கைப் பாதையைத் துணிவுடன் தேர்ந்தெடுக்கின்றனர்.

விருதுகள்[தொகு]

  • 1991 – பிற சமுதாய சிக்கல்கள் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. Oru Veedu Iru Vasal, IMDb, 2008-12-13 அன்று பார்க்கப்பட்டது
  2. 2.0 2.1 2.2 2.3 Oru Veedu Iru Vasal, Cine South, 2008-12-13 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]