மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்து, நூறு நாட்கள் திரையிடப்பட்டத் தமிழ் திரைப்படங்களுள் ஒன்று. வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்கும் ஒரு நர்ஸ். குடும்பம், ஓடிப்போகும் சகோதரி, சகோதரன் மரணம், கணவனின் விவாகாரத்து என பல போராட்டங்களை ஒரு சேர சந்திக்கும் பெண் அவளது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது இப்படத்தின் கதை.[1]
கண்ணின் மணியே பாடல்[தொகு]
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா பாடலை பாடகி சித்ரா பாடினார்.
பொருள்[தொகு]
பெண்களின் நிலையை, பெண்ணிய கருத்துக்களை இப் பாடல் எடுத்துக் கூறுகிறது. எ.கா 1:
பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா பழம் பாட்டோடுதானா.. அது ஏட்டோடுதானா..
எ.கா 2:
சாத்திரங்கள் பெண்ணினத்தை மூடி மறைத்ததம்மா அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மகளிர் தினம் ஸ்பெஷல்: பெண்மையைப் போற்றும் படங்கள் ஒரு பார்வை!". பார்த்த நாள் 18 November 2019.